ஆத்ரேயபுரம்
ஆத்ரேயபுரம் (Atreyapuram) என்பது ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒர் கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்[1].
ஆத்ரேயபுரம் Atreyapuram | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | East Godavari |
வட்டம் (தாலுகா)கள் | ஆத்ரேயபுரம் |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 533235 |
தொலைபேசிக் குறியீடு | 91-8855 |
அரிசி நொய்யில் இருந்து தயாரிக்கப்படும் பூத்தாரெக்குளு எனப்படும் இனிப்புப் பண்டம் இக்கிராமத்தின் தனிச்சிறப்பு ஆகும். பூத்தாரெக்கு மற்றும் மாமிதிடந்திரா ஆகியன 100 வருடங்களுக்கு முன்பே ஆத்ரேயபுரத்தை பிறப்பிடமாக கொண்டவையாகும். முதுனூரி அக்கி ராசு என்பவர் முதன்முதலில் இப்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்தார் என்று கருதப்படுகிறது.
புவியியல்
தொகுஆத்ரேயபுரம் 16°50′2.97″ வடக்கு 81°47′12.85″ கிழக்கு என்ற ஆள்கூறுகள் அடையாளத்தில் ராசமுந்திரி நகரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் காக்கிநாடா நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முற்காலத்தில் ஆத்ரேயபுரக்கிராமம் "[2] என்று அழைக்கப்பட்ட இக்கிராமம் தற்பொழுது நல்ல போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 533235 ஆகும்.
கல்வி நிறுவனங்கள்
தொகுமகாத்மா காந்தி இளநிலை கல்லூரி மகாத்மா காந்தி பட்டக் கல்லூரி மற்றும் முதுநிலை மையம். மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளி மகரிசி வித்யா நிகேதன்
வங்கிகள்
தொகுபாரத மாநில வங்கி [3] ஒன்றும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கியொன்றும் [4] இக்கிராமத்தில் இயங்கி வருகின்றன.
பஞ்சாயத்துகள்
தொகுஆத்ரேயபுரம் கிராமம் பின் வரும் பஞ்சாயத்துகளை உள்ளடக்கியுள்ளது.
- போபார்லங்கா
- பேராவரம்
- ராசாவரம்
- வெளிச்செரு
- வத்திப்பாரு
- புலிதிந்தி
- உச்சிலிi
- ஆத்ரேயபுரம்
- வசந்தவடா
- ததிபுடி
- காட்டுங்கா
- நார்கேதிமில்லி
- அங்கம்பாலெம்
- ரையாலி
- உலொல்லா
- வாடப்பல்லி
- மெர்லாபாலெம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Integrated Management Information System (IMIS)". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
- ↑ Sri pada Sri vallabha Charithamrutham page no. 3
- ↑ "State Bank Of India, Atreyapuram branch - IFSC, MICR Code, Address, Contact Details, etc". பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Idbi Bank, Atreyapuram branch - IFSC, MICR Code, Address, Contact Details, etc". பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.[தொடர்பிழந்த இணைப்பு]