அஜித் இக்பால் சிங்
அஜித் இக்பால் சிங் (Ajit Iqbal Singh)(பிறப்பு 1943 [1] ) ஓர் இந்தியக் கணிதவியலாளர், செயல்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் ஒத்திசைவான பகுப்பாய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். சிங் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் இந்தியாவின் உயர்மட்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் உறுப்பினராக உள்ளார்.[2] இவர் அலகாபாத்தில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[3]
கல்வி
தொகுசிங் இந்திரபிரசுதா கல்லூரியில் கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.[4] மேலும் தில்லி பல்கலைக்கழகத்தில் 1963 இளநிலை மற்றும் 1965 முதுநிலை பாடத்தில் பட்டம் பெற்றார்.[2] 1969-இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 'குவிந்த இடைவெளிகளில் நேரியல் இயக்கு கோட்பாட்டிற்கான பங்களிப்புகள்' என்ற தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. இந்த ஆய்வினை பிராங்க் சுமிதிசால் மேற்பார்வையிட்டார்.[5] சிங் கேம்பிரிட்ச்சில் 1966 முதல் 1969 வரை நியூன்ஹாம் கல்லூரியில் பொதுந்லவாய ஆய்வாளராக இருந்தார்.[6]
தொழில்
தொகுசிங் தனது முதுநிலை பட்டப்படிப்பை முடித்த உடனேயே, தில்லிப் பல்கலைக்கழகத்தின் இந்திரபிரசுதா கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். கேம்பிரிட்ச்சில் தனது முனைவர் பட்டத்தை முடித்த இவர், தில்லிக்குத் திரும்பி இந்துக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். செயல்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் சீரிசை பகுப்பாய்வு ஆகியவற்றில் இவர் தனது ஆராய்ச்சியினை மேற்கொண்டதுடன் கற்பித்தலையும் தொடர்ந்தார். 1974-இல், சிங் தில்லி பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் கணித பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1984 முதல் 2008 வரை பேராசிரியராகத் தொடர்ந்தார். 2008 முதல், தில்லி மையத்தில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் வருகைப் பேராசிரியராக இருந்து வருகிறார்.[2]
பணி
தொகுசிங் அண்மையில் குவிந்த இடைவெளிகள், இடவியல் இயற்கணிதம், அதீத குழுக்களில் நிறமாலை இணைப்பாக்கம், பெருக்கிகள் மற்றும் தொகுதி காப்பமைவியம், பகுதிகுழு இயற்கணிதங்கள், வேறுபட்ட சமன்பாடுகள் மற்றும் செங்கோண பல்லுறுப்புக்கோவைகள், வடிவியல் அளவீடுகள், வடிவியல் வரம்பில் இசைவகுப்புபகுப்பாய்வின் பயன்பாடுகள் ஆகியவற்றில் நேரியல் செயல்பாடுகளில் பணியாற்றியுள்ளார்.[2][6]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகுசிங்குக்கு ராய் பகதூர் பிரிஜ் மோகன் லால் சாகேப் நினைவு தங்கப் பதக்கம் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் ரவி காந்தா தேவி பரிசு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Year Book 2014 // Indian National Science Academy, New Delhi
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Ajit Iqbal Singh bio". Indian National Science Academy (INSA). Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
- ↑ "National Academy of Sciences (India) Fellows". National Academy of Sciences (India) www.nasi.org.in. Archived from the original on 16 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
- ↑ "Alumna of the College". http://www.ipcollege.du.ac.in/Alumna.htm.
- ↑ "Mathematics Genealogy Project - Ajit Iqbal Singh". Mathematics Genealogy Project www.genealogy.math.ndsu.nodak.edu. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
- ↑ 6.0 6.1 "Visiting Mathematicians - Ohio". Ohio University www.ohio.edu. Archived from the original on 22 October 2014. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.