அஜித் நைனான்

கேலிச்சித்திரக்காரர்

அஜித் நைனான் (Ajit Ninan, 15, மே, 1955 [1] - 8 செப்டம்பர் 2023) என்பவர் ஒரு இந்திய அரசியல் கேலிச்சித்தரக்காரர் ஆவார். இவர் இந்தியா டுடே இதழிலும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் கேலிச்சித்திரங்களை வரைந்ததற்காக மிகவும் பிரபலமானார்.

அஜித் நைனான்
பிறப்பு(1955-05-15)15 மே 1955
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு (அகவை 68)
மைசூர்
தொழில்ஓவியர் கேலிச்சித்திர வரைஞர்
தேசியம்இந்தியர்
காலம்1979-2023
வகைதலையங்க கேலிச்சத்திரங்கள்
கருப்பொருள்நடப்பு நிகழ்வுகள்
துணைவர்எலிசபெத் நைனன்
பிள்ளைகள்சம்யுக்தா, அபராஜிதா
குடும்பத்தினர்அபு ஆபிரகாம் (மாமா)

வாழ்க்கை குறிப்பு

தொகு

இளம் வயதில் பள்ளி விடுதியில் அஜித் நைனான் தங்கிப் படித்தார். பெற்றோரைப் பிரிந்த ஏக்கத்தை மறக்க ஓவியங்களை வரையத் தொடங்கினார். பஞ்ச், நியூ யார்க்கர் இதழ்களில் வெளியாகும் கேலிச்சித்திரங்களை இரசிக்கத் தொடங்கினார்.நைனானின் உறவினரான அபு ஆபிரகாம் ஒரு பிரபல கேலிசித்திரக்காரராக இருந்தார். அவரிடமிருந்து கேலிச்சித்திக் கலையின் அடிப்படைகளை அறிந்து கொண்டார். 1968 இல் இவர் வரைந்த கேலிச்சித்திரம் முதன் முதலில் சங்கர் வீக்லியில் வெளியானது.

1972-1977 காலகட்டத்தில் சென்னை கிறித்துவக் கல்லூரியில், அரசியில் அறிவியல் படித்தார். பின்னர் சென்னையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தில்லிக்கு பணிமாறுதல் காரணமாக சென்றார். இந்தியா டுடே, பிசினஸ் டுடே, டால்கெட் இதழ்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்து புகழ்பெற்றார்.[2] 1992 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் அவுட் லுக் இதழில் பணியாற்றினார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் பணியாற்றினார். [3] அதில் இவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் அரசில் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இவர் 2023 செப்டம்பர் 8 அன்று தன் 68வது வயதில் இறந்தார். [4]

படைப்புகள்

தொகு

காமிக் கோட்டோவியங்கள்

தொகு
  • டிடெக்டிவ் மூச்வாலா, டார்கெட் இதழில் வெளியானது.

கேலிச்சித்திரங்கள்

தொகு
  • அஜித் நைனன்ஸ் பன்னி வேல்ட் டார்கெட் இதழில் வெளியானவை
  • ஜஸ்ட் லைக் தட்! டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்டது.
  • லைக் தட் ஒன்லி! ( ஜூக் சுரையாவுடன் ), டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வாரம் இருமுறை வெளியிடப்பட்டது. [5]
  • சென்டர்ஸ்டேஜ், இந்தியா டுடேயில் வெளியிடப்பட்டது
  • நைனான்ஸ் வேல்ட், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்டது
  • டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 2009 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பாலி ட்ரிக்ஸ் என்ற தொடர் கேலிச்சத்திரங்கள் வெளியிடப்பட்டன.
  • ஐடூன்ஸ் : தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சுனில் அகர்வாலுடன் இணைந்து வரைந்த கேலிச்சித்திரங்கள்

புத்தகங்கள்

தொகு
  • Ajit Ninan and Jug Suraiya (2007). Like That Only. Times Group Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89906-13-9.
  • Ninan, Ajit, and Sudeep Chakravarti (eds.). The India Today Book of Cartoons. New Delhi: Books Today, 2000.

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • 06 ஆகத்து 2022 | பார்டூன்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது | இந்திய கார்ட்டூனிஸ்ட் நிறுவனம் மூலம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_நைனான்&oldid=3854209" இலிருந்து மீள்விக்கப்பட்டது