அஜித் பிரகாசு சா

அஜித் பிரகாசு சா (பிறப்பு 13 பிப்ரவரி 1948 சோலாப்பூர்) என்பவர் இந்தியாவின் 20வது சட்ட ஆணையத்தின் தலைவர் ஆவார். இவர் மே 2008 முதல் பிப்ரவரி 2010-ல் ஓய்வு பெறும் வரை தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிலிருந்தார்.[1]

மாண்புமிகு நீதியரசர்
அஜித் பிரகாசு சா
தலைமை நீதிபதி, தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில்
மே 2008 – பிப்ரவரி 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அஜித் பிரகாசு சா

நீதிபதி சா சோலாப்பூரில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சட்டப் படிப்பினை மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார். சோலாப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சிறிது காலப் பயிற்சிக்குப் பிறகு, இவர் 1977-ல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் அப்போதைய முன்னணி வழக்கறிஞர் ஸ்ரீ எஸ்சி பிரதாப்புடன் பணியாற்றினார். இங்கு சொத்துரிமை, அரசியலமைப்பு, சேவை மற்றும் தொழிலாளர் விடயங்களில் அனுபவம் பெற்றார்.

1992ஆம் ஆண்டு திசம்பர் 18ஆம் தேதி பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சா, 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நிரந்தர நீதிபதியானார். பின்னர் 12 நவம்பர் 2005 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.[2] மே 7, 2008 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.[3]

சூன் 2011 முதல், நீதிபதி சா இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை அமைத்த செய்தி அல்லாத பொது பொழுதுபோக்கு அலைவரிசைகளுக்கான சுய-ஒழுங்குமுறை அமைப்பான[4] ஒளிபரப்பு உள்ளடக்கப் புகார் குழுமத்தின் தலைவரானார்.[5]

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் சர்ச்சை

தொகு

11 சனவரி 2016 அன்று, ரிலையன்ஸ் தொழிற்சாலை-எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் சர்ச்சையில் சா தலைமையிலான குழுவின் அதிகார வரம்பை மறுத்தது. நீதிபதி ஏபி சா தலைமையில் குழுவை அமைத்து சர்ச்சையில் தலையிட எண்ணெய் அமைச்சகத்தின் முடிவை ரிலையன்சு சவால் செய்தது. திசம்பர் 31 அன்று நடந்த குழுவின் முதல் கூட்டத்தில், ரிலையன்சு தொழில் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர் நிகோ இதன் நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Architect of HC gay order known for bold rulings". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 July 2009. Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Madras High Court". Hcmadras.tn.nic.in. 24 July 2004. Archived from the original on 11 March 2014. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012.
  3. "AP Shah Transferred from Madras High Court to Delhi High Court". தி இந்து. India. 7 May 2008. Archived from the original on 7 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "History & Vision | Indian Broadcasting Foundation". www.ibfindia.com.
  5. "Indian Broadcasting Foundation". www.ibfindia.com.
  6. Choudhary, Sanjeev. "ONGC-RIL dispute: RIL rejects Shah Panel, argues for arbitration" – via The Economic Times.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_பிரகாசு_சா&oldid=3742465" இலிருந்து மீள்விக்கப்பட்டது