அஜ்மல் கட்டக்

அஜ்மல் கட்டக் (Ajmal Khattak பஷ்தூ: اجمل خټک ) (15 செப்டம்பர் 1925 - பிப்ரவரி 7, 2010) ஒரு பஷ்டூன் அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர், அவாமி தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரும் மற்றும் மறைந்த கான் வாலி கானின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[1]

அவரது ஆரம்பகால மாணவர் வாழ்க்கை பிரிட்டிஷ் ராஜுக்கு எதிரான தீவிர ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்ட்டதன் மூலம் பரவலாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து இவர் குடாய் கிட்மத்கர் இயக்கத்தில் இணைந்தார். 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பிரிவியினையைத்த் தொடர்ந்து இவர் தேசிய அவாமி கட்சியில் சேர்ந்தார் . அங்கு இவர் அப்துல் வாலி கானின் நெருங்கிய நண்பரானார்.

இவர் 1969-1973 ஆண்டுகள் வரை தேசிய அவாமி கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் அப்துல் ஹக் எனப்வரால் தோற்கடிக்கப்பட்டார். சுல்பிகர் அலி பூட்டோவின் அரசாங்கத்தால் கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, அஜ்மல் கட்டாக் காபூலுக்கு நாடு கடத்தப்பட்டார். 1989 ல் திரும்பிய இவர் 1990 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வாலி கான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவாமி தேசியக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2000 ஆம் ஆண்டில் ஒரு அதிகாரத்திற்கான போட்டி ஏற்பட்டது. இவர் பிரிந்து சென்று தனியாக ஒரு கட்சியை உருவாக்கினார். சிறிது காலத்திற்குப் பிறகு அவாமி தேசியக் கட்சியில் மீண்டும் சேர்ந்தார். பிறகு குறுகிய காலத்திற்குப் பின்பாக இவர் அரசியலில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

1925 செப்டம்பர் 15 ஆம் தேதி கட்டாக்கில் பிறந்த அஜ்மல் கட்டாக் சிறுவயது முதலாக இவர் கான் அப்துல் கபார்கானினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவருக்கு 17 வயதாக இருக்கும் போது இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார். பெஷாவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவராக இருந்ததனால் அவரால் இயக்கத்திற்கு கூடுதல் பங்களிப்பை வழங்க இயலவில்லை. அதன் பின்பு கல்வியில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார்.இருப்பினும் பெஷாவர் பல்கலைக்கழகத்தில் பாரசீக மொழியில் முதுகலைப் படிப்பை முடித்த இவர் மீண்டும் கற்றலைத் தொடர்ந்தார். மேலும் ஒரு முற்போக்கான கவிஞராக பாராட்டப்பட்டார்.[1]

அரசியல் வாழ்க்கை தொகு

1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் அப்துல் ஹக் எனப்வரால் தோற்கடிக்கப்பட்டார், இருப்பினும் சுல்பிகர் அலி பூட்டோவின் அரசாங்கத்தால் கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, அஜ்மல் கட்டாக் காபூலுக்கு நாடு கடத்தப்பட்டார்.அஜ்மல் கட்டக் தேசிய அவாமி கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்23 மார்ச் 1973 அன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி பேரணியான லியாகத் பாக்கின் அமைப்பாளராகவும் செயலாளராகவும் இருந்தார். அப்போது கான் அப்துல் வாலி கான் உள்ளிட்ட யுடிஎஃப் தலைவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பேரணியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் பல யுடிஎஃப் மற்றும் என்ஏபி தொழிலாளர்கள் அதிகாரிகளால் கொல்லப்பட்டனர்.

இறப்பு தொகு

பிப்ரவரி 7, 2010 ஞாயிற்றுக்கிழமை பெஷாவரில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் கட்டாக் இறந்தார்.அப்போது அவருக்கு வயது 85 ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலை விட்டு வெளியேறிய இவர் தனது சொந்த கிராமமான அகோரா கட்டாக்கில் வசித்து வந்தார்.[2] இவர் இறந்து ஒரு நாள் கழித்து இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.[3]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 From Khudai Khidmatgar to National Politician : An interview with Ajmal Khattak, The NEWS Islamabad, 11 February 1994.
  2. ANP Leader Ajmal Khattak Passes Away (7 February 2010) "DAWN"
  3. Pashtun politician Ajmal Khattak laid to rest பரணிடப்பட்டது 14 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம் (9 Feb 2010) "the Daily Times"
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_கட்டக்&oldid=2868137" இலிருந்து மீள்விக்கப்பட்டது