அஜ்மல் கான் பூங்கா

அய்மல் கான் பூங்கா (Ajmal Khan Park) இந்திய நாட்டின் தலைநகரான புதுதில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்காவாகும்.

அய்மல் கான் பூங்கா
Ajmal Khan Park
Map
வகைநகரப் பூங்கா
அமைவிடம்கரோல் பாக் , புதுதில்லி, இந்தியா
பரப்பளவு5 ஏக்கர்கள்
உருவாக்கம்1921
இயக்குபவர்புது தில்லி மாநகராட்சி மன்றம்

ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இப்பூங்கா தொடக்கத்தில் 1921 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரரும் யுனானி மருத்துவருமான[1] அக்கீம் அய்மல் கான் என்ற (1868-1927) பெயர் இப்பூங்காவிற்கு வைக்கப்பட்டிருந்தது. அக்கீம் அய்மல் கான் கட்டிய திப்பியா கல்லூரிக்கு அருகில் இப்பூங்கா அமைந்துள்ளது. பூங்காவின் மையப் பகுதியில் அய்மல் கானின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலைக்கு அருகில் ஒர் இசை நீரூற்றை தில்லி சுற்றுலா வளர்ச்சி மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக் கழகம்[2] [3] அமைத்து பராமரிக்கிறது. 20,000 நபர்களுக்கு மேலாக பங்குகொள்ளும் அரசியல் ஊர்வலங்கள் நடத்துவதற்கு இப்பூங்கா மிகச்சிறந்ததொரு இடமாகும்[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "NDMC to renovate Ajmal Khan Park in Karol Bagh". Zee News. 17 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.
  2. "Gardens Parks & Picnic Spots in New Delhi". Delhi Tourism. Archived from the original on 2014-12-25. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.
  3. "NDMC to renovate Ajmal Khan Park in Karol Bagh". Business Standard. 17 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.
  4. Ambika Pandit (31 Mar 2014). "Sonia raises pitch with history lesson on Karol Bagh's Ajmal Khan Park". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_கான்_பூங்கா&oldid=3777306" இலிருந்து மீள்விக்கப்பட்டது