அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர் (Anjali Nair) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.[2] இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றவர்.[3][4][5]
அஞ்சலி நாயர் | |
---|---|
பிறப்பு | 16 சூலை 1988 கொச்சி |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர், மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 1994-1996 2010 - தற்போது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பென் |
வாழ்க்கைத் துணை | அனீஷ் உபசனா |
பிள்ளைகள் | அவனி [1] |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஉஷா மற்றும் கிரிதரன் நாயர் ஆகியோருக்கு அஞ்சலி பிறந்தார். மனதே வெள்ளிதெருவில் குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவருக்கு ஒரு மகள் அவனி, 5 சுந்தரிகள் என்ற திரைப்படத்தில் அஞ்சலி நாயருடைய ஐந்து மகள்களில் ஒரு மகளாக நடித்தார்.[4][6]
தொழில்
தொகுதொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கும் முன்பு, 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். பின்னர் வினீத் ஸ்ரீனிவாசனின் லா கொச்சின் உட்பட பல இசை ஆல்பங்களில் நடித்தார்.[6] அவர் "பந்தங்கள் பந்தங்களா" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.
குறும்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2015 | புஞ்சிரிக்கு பரஸ்பரம் | பள்ளி சிறுமியின் தாயார் | குறும்படம் |
2017 | அமர் ஜவான் அமர் பாரத் | இராணுவ வீரரின் மனைவி | தேசபக்தி காணொளி |
2017 | ஒரு முத்தாசி கதா | அஞ்சலி | குறும்படம் |
2017 | சி டிசர்வ்ஸ் பெட்டர் | லட்சுமி | காணொளி |
2017 | நந்தா | நந்தாவின் தாய் | |
2017 | சித்ரா | சித்ரா | |
2017 | கேன்வாஸ் | முரா மனு | |
2017 | எந்தா இங்கனே? | அம்மு | இயக்குநரும் கூட |
2018 | நித்யஹரிதா காமுகன் | பள்ளி சிறுவனின் தாய் | |
2018 | சாகிதம் | பாட்டி | |
2019 | தி சீக்ரெட் | ரோசினி | |
2019 | ஒப்பனா | சுகாரா சீனியர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sreekumar, Priya (9 March 2016). "Happy mom on ‘n off screen". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/mollywood/090316/happy-mom-on-n-off-screen.html. பார்த்த நாள்: 7 September 2019.
- ↑ "Anjali Nair - State Award Winner".
- ↑ "Happy mom on 'n off screen". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
- ↑ 4.0 4.1 "Atley asked to not smile, be a rebel: Anjali". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
- ↑ "First, Vipin said I had no role in Ben: Anjali Aneesh". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
- ↑ 6.0 6.1 "A 'surprise' winner". தி இந்து. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.