அஞ்சா செட்டி ஆண்டர்சன்
அஞ்சா செட்டி ஆண்டர்சன் (Anja Cetti Andersen) (பிறப்பு: 25 செப்டம்பர் 1965) ஓர்ழ்சோல்மில் பிறந்த டேனிசிய (டென்மார்க் நாட்டு) வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார்.
அஞ்சா செட்டி ஆண்டர்சன் | |
---|---|
2022 இல் ஆண்டர்சன் | |
பிறப்பு | 25 செப்டம்பர் 1965 ஓர்ழ்சோல்ம், டென்மார்க் |
துறை | வானியற்பியல், வானியல், கற்பித்தல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | கோபனாவன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | அண்டத் தூசு, கோள் உருவாக்கம், பதிப்பும் வெளியீடும் |
விருதுகள் |
|
வாழ்க்கை
தொகுஇவர் அறிவியல் இளவல் பட்டத்தை 1991 இலும் வானியலில் அறிவியல் முதுவர் பட்டத்தை 1995 இலும் முனைவர் பட்டத்தை 1999 இலும் கோபனேகன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்]. இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு "அண்டத் தூசும் பிந்தையவகை விண்மீன்களும்" என்பதாகும்.மிவர் தன் முது முனைவர் பட்டத்தைக் கார்ல்சுபெர்கு அறக்கட்டளை நிதி நல்கை பெற்று, முதலில் உப்சாலா பல்கலைக்கழக வானியல், விண்வெளி இயற்பியல் துறையில்லும் பின்னர் கோபனேகன் பல்கலைக்கழக வான்காணகத்திலும் மேற்கொண்டார். பிறகு, இவர் தன் தாய் நிறுவன நிதிந்ல்கை கொண்டு அறிவியல் புல உயர்க்கல்வி பயிற்றலில் பட்டயத்தைப் பெற்றார்.[1] இவரது வானியல் ஆர்வம் இவர் ஏழாம் வகுப்பு பயிலும் போது மேற்கொன்ட சுற்றுலாவில் டேனிசிய வானியலாளரான உபேகிரே யோர்கன்சனைச் சந்தித்த போது கால்கொண்டது.[2] இப்போது இவர் கோபனேகனில் அவருடந்தான் பணி புரிந்து வருகிறார். இவருக்கு ஜூலி, செசிலி, யாகோப் என மூன்று குழந்தைகள் உண்டு.
வாழ்க்கைப்பணி
தொகுஇவரது முதன்மையான பணி அண்டத் தூசு பற்றியதாகும்; சிக்கான மூலக்கூறுகளையும் விண்மீன்களையும் கோள்களையும் உருவாக்குவதில் அண்டத் தூசின் பாத்திரத்தைத் தன் ஆய்வால் நிறுவியுள்ளார்.[3] இவர் இப்போது நீல்சு போர் நிறுவனத்தில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் தான் ஆய்வு செய்யும் கோபனேகனில் உள்ள கரும்பொருண்ம மைய மேலாண்மையிலும் பங்கேற்றுள்ளார். ளைவர் பல கல்வியியல் ஆய்வுகலி வெளியிட்டுள்ளார்; பல நூல்களை எழுதியுள்ளார்;இவர் ஒரு விரிவுரையாளராக மட்டுமன்றி, பொதுமக்களுக்கு அறிவியலின் நன்மைகளை நல்ல பரப்புரை நுட்பங்களால் விளக்கும் தலைசிறந்த பேச்சாளராகவும் விளங்குகிறார். இவரது ஆய்வு இயற்பியல், வேதியியல், புவியியல், உயிரியல் எனப் பலதுறை ஊடாட்டத்தில் அமைவது ஆகும். இவரது தொடக்க ஆய்வுகள் விண்கற்களின் முந்துசூரியக் குறுணைகளைப் பற்றியதாகும். இவர் 2003 இல் சுசான் ஓப்னரொடு ஆய்வு மேற்கொண்டு, "அண்டத் தூசின் துல்லியமான நுண்ணியற்பியல் விவரம், விண்மீன்களின் அணுகுகோட்டுப் பெருமீன் பொருண்மை இழப்பு வீதங்களை முன்கணிக்க இன்றியமையாததாகும்" எனக் காட்டினார். ஓப்னருடனான ஆய்வைத் தொடர்ந்து மேற்கொன்டு, தூசு முடுக்கக் காற்றுச் செயல்பாடு பற்றிய புரிதலை வளர்த்தெடுத்தார். இவர் மற்ற உப்சாலா ஆய்வாளர்களோடு இணைந்து, விண்மீன்களை விட்டு வெளியேறி உடுக்கண இடைவெளியில் நுழையும்போது, "எப்படி தூசுக் குறுணைகளின் ஒளியியல் பண்புகள் மாறுகின்றன" எனக் காட்டினார்.[4] இவர் தொடக்கநிலைக் கோள் உருவாக்கத்தில் அண்டத் தூசுகளின் விளைவை ஆய்வு செய்யும்போதே, புவி உயிரின அமினோ அமிலங்கள் ஏன் இடதுகைத் திருப்பத்தையும் சர்க்கரை மூலக்கூறுகள் வலதுகைத் திருப்பத்தையும் கொண்டுள்ளன என்பதையும் ஆய்வு செய்தார்.[3] இவரது பலதுறை ஆய்வு அணுகுமுறையிலும் பொதுவான ஆய்வு முறையியலிலும் மரபு சாராத இழை எப்போதும் ஊடாடியது. இவர் தன்னைப் பற்றி, நானொரு புதுவகை வானியலாளர் ஆவேன்; ஏனெனில், நான் நோக்கீட்டு ஆய்வை விட விண்கற்களின் வேதியியல் உட்கூறுகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வக ஆய்வை எனது தனித்த அணுகுமுறையாகக் கொண்டுள்ளேன் எனவும். இதைக் கொண்டே நான் சூரிய அமைப்புகளின் கோட்பாட்டுப் படிமங்களை உருவாக்க முனைகிறேன் எனவும் கூறுகிறார்".[5]
இவர், தன்னோடு பணிபுரியும் தானே பீட்டர் கிளவுசனுடன் இணைந்து பொதுமக்களுக்கான வானியல் நூல்களை எழுதிய அறிவியல் எழுத்தாளரும் ஆசிரியரும் ஆவார்.[6] இவர் இவருடைய புலங்களில் தலைசிறந்த ஆய்வாளராக ஏற்கப்பட்டதோடு, "பொதுமக்களும் இளைஞர்களும் புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி தெரிவிக்கப்படவேண்டும்" என நம்பும் அறிவியலாளராகவும் விளங்குகிறார்.[5] இவர் குழந்தைகளுக்கான வானியல் நூல்களையும் "Stjernsov og Galakser" (விண்மீன் தூசும் பால்வெளிகளும்) எனும் நூலையும் மிக அண்மையில், "Livet er et Mirakel" (உயிரெனும் அதிசயம்) எனும் நூலை ஆன்னா மெய்ல்கெதே எனும் இறையியல் மெய்யியலாளருடன் இணைந்து எழுதியுள்ளார். லிவருக்கு அவரது கல்வித் திறனமைக்காகவும் பொதுமக்கள் பரப்புரைக்காகவும் அறிவியலை எளிமையாக விளக்கியதற்காகவும் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பாலினச் சமமைக்கான 2007 ஆம் ஆண்டு தியோப் கருத்தரங்கில் இருந்து இவர் அறிவியல் புலங்களில் மகளிர் தலைமைப் பதவிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். "நான் பெண் என்பதால் மேற்பதவியை ஏற்று அதில் என் வல்லமையைக் காட்டுவேனே ஒழிய, அந்த வாசல் கதவுக்கு வெளியே இருந்து வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மருகிக் கொண்டிருக்க மாட்டேன். இதற்காக நான் சாட்டையைப் பயன்படுத்துகிறேனா அல்லது காரட்டுக் கிழங்கைப் பயன்படுதுகிறேனா என்பதல்ல நோக்கம், எப்படியும் செயல்நிறைவேற்றமாகவே அது அமையவேண்டும்." [7] பின்வரும் கல்விசார் நிகழ்படத்தில் இவர் கருப்பாற்றல், கரும்பொருண்மம், அண்டத் தூசு, இன்னும் பல வானியல் பொருண்மைகளைப் பற்றிய தனது ஆய்வுகளை விரிவாக விளக்குகிறார்: அஞ்சா செட்டி ஆண்டர்சன் நேர்காணல் – நூலாசிரியர், பேராசிரியர், ஆய்வாளர் – கோபனேகன் பல்கலைக்கழகம்".[8][9] மேலும், சிறுகோள் 8820 அஞ்சாண்டர்சன் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது; இதன் மாற்றுப் பெயரீடுகள் 1985 VG = 1961 CE1 = 1978 YO1 = 1992 SG24 = 1994 CS1 ஆகும்.[10]
விருதுகள்
தொகு- 2016: பரந்துபட்ட மக்கள் வட்டாரத்துக்கு அறிவியலைச் சரியாக பரப்பியதற்காக எச். சி, ஆயர்சுடெடின் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.[11]
- 2011: Det Naturvidenskabelige Fakultets Formidlingspris (பரப்பல் பரிசு), புலத்தின் மிகச் சிறந்த பொதுமக்கள் பரப்புரைப் பங்களிப்புக்கான செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டது[12]
- 2009: Svend Bergsøes Fonds Formidlingspris பரிசு மிகச் சிறந்த மக்கள் பரப்புரைக்காக வழங்கப்பட்டது.[13]
- 2009: மதில்டே பிபிகர் பரிசு கல்வித் துறைகளில் ஆண் - பெண் பாலினச் சமமைக்காக பங்குபற்றியமைக்காக வழங்கப்பட்டது.[14]
- 2008: முதுநிலை, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான டேனிசியக் கழகப் பரிசு "இவரது இணையற்ற பன்னாட்டு முன்னணி ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் திறமைக்காகவும் தன் ஆராய்ச்சி முடிவுகளை எளிமையாகப் பரப்பும் திறமைக்காகவும் அதன்வழியாக பரந்த அளவில் வானியல் ஆர்வத்தை ஏற்படுத்தியதற்காகவும்" வழங்கப்பட்டது.[15]
- 2007: டேனிசிய தொழில்நுட்ப அறிவியல் புலங்களின் கல்விக்கழக உறுப்பினராகத் (Akademiet for de Tekniske Videnskaber) தேர்வு செய்யப்பட்டார்.[16]
- 2006: டேனிசிய வானொலியின் உரோசென்கியேர் பரிசு மிகச் சிறந்த பொதுமக்கள் உரைக்காக வழங்கப்பட்டது.[17]
- 2006: கிரிசுதைன் மேயர் விருது மிகச் சிறந்த ஆய்வுப்பணிக்காக வழங்கப்பட்டது.[18]
- 2006: இவ்வாண்டின் மிகச் சிறந்த இளைஞர் பரிசு (TOYP 2006) கல்வியியல் சாதனைக்காக பன்னாட்டு இளவல் வணிகக் குழுவால் (இது உலகளாவிய இளந்தலைவர், தொழில்முனைவோர் கூட்டமைப்பு) வழங்கப்பட்டது.[19]
- 2005: ஐரோப்பிய ஒன்றியத்தின் தெ கார்த்தே பரிசு வழங்கப்பட்டது. இது அறிவியல் தொடர்பாடலில் சிறப்புத் தகுதி பெற்றவருக்கு வழங்கப்படுவதாகும்.[20]
- 2004: தன்னிகரற்ற மக்கள் பரப்புரைக்கான டேனிசு விருது (Danmarks Forskningskommunikationspris 2004) டென்மார்க்கில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் புதுமையாக்கத்துக்கான டேனிசு அமைச்சகம் வழங்கியது.[21]
- 2003: டேனிசு கல்வி அமைச்சகம் கல்விப் பாடப் பொருளுக்கான பரிசு வழங்க (Undervisningsministeriets Undervisningsmiddelspris 2003) இவர் பெயரை அறிவித்தது. இது இவரது Videnskabet பாடப் பொருளுக்காக வழங்கப்பட்டது. இதில் "விண்மீன்தூசால் ஆனது" (Skab af Stjernestøv) எனும் நூலும் உள்ளடங்கும்.[22]
- 2000: மக்கள் பரப்புரைக்காக ஜெட்டியும் நீல்சு போர் நிறுவனமும் ஆலன் மக்கிந்தோழ்சு விருதை வழங்கினர்.[23]
- 1999: ஆண்டர்சன் நிகழ்த்திய அண்டம் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சி, பாரீசு, 16 ஆம் பன்னாட்டு அறிவியல் தொலைக்காட்சி விழாவில் பிரிக்சு இதழின் பரிசை வென்றது. DR2 அலைவரிசையில் பரப்பப்பட்ட அண்டம் நிகழ்ச்சி மக்களால் 1998 இல் பெரிதும் விரும்பப்பட்ட நிகழ்ச்சியாகும்.[24]
- 1997: டேனிசிய வானியல் கழகத்தின் (Dansk Astronomisk Selskab) இவ்வாண்டுக்கான விருதுபெற்ற எழுத்தாளர்.[25]
உறுப்பாண்மைகள்
தொகுபுலமைக் கழகங்கள்
- 2007 ஆம் ஆண்டு முதல்: டேனிசிய தொழில்நுட்ப அறிவியல் கலவிக்கழகம்
- 2003 ஆம் ஆண்டு முதல்: பன்னாட்டு வானியல் ஒன்றியம்
- 2001 ஆம் ஆண்டு முதல்மைரோப்பிய வானியல் கழகம்
- 1999 ஆம் ஆண்டு முதல்: Foreningen for Kønsforskning i Danmark
- 1997 ஆம் ஆண்டு முதல்மைரோப்பிய இயற்பியல் கழகம்
- 1996 ஆம் ஆண்டு முதல்: வானிலையியல் கழகம்
- 1994 ஆம் ஆண்டு முதல்: டேனிசிய இயற்பியல் கழகம் (Dansk Fysisk Selskab)
- 1993 ஆம் ஆண்டு முதல்: டேனிசிய வானியல் கழகம் (Dansk Astronomisk Selskab)
- இவற்றோடு, இவர் நோர்திக் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தில் NORDITA ஆய்வுறுப்பினராகவும் வானியற்பியல், வானுயிரியல் ஆராய்ச்சிக் குழுவில் அமர்வு உறுப்பினராகவும் உள்ளார்.[26]
இணையக் குழுக்கள்
- 2009 ஆம் ஆண்டு முதல்: VLகுழு 77 - கோபெனேகன்
- 2007 ஆம் ஆண்டு முதல்: Albrightgruppen.dk
- 2005 ஆம் ஆண்டு முதல்: நோர்திக் பெண் இயற்பியல் மகளிர் வலைக்குழு (NORWIP)
- 2003 ஆம் ஆண்டு முதல்: Skeptica.dk
- 1999 ஆம் ஆண்டு முதல்: சுவீடியப் பெண் இயற்பியலாளர்
- 1998 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றிய 5 ஆம் சட்டகம் நிறுவிய பெண் அறிவியலாளர் வலைக்குழுக்கள்
- 1995 ஆம் ஆண்டு முதல்: பெண் இயற்பியல் மகளிர் வலைக்குழு, டென்மார்க் [27]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anja C. Andersen employment". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ "Uffe Grĺe Jřrgensen". Astro.ku.dk. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ 3.0 3.1 "Anja C. Andersen receives researchers' own award – Niels Bohr Institute - University of Copenhagen". Nbi.ku.dk. 2008-11-10. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ "Anja C. Andersen research". Archived from the original on 2007-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
- ↑ 5.0 5.1 "Anja C. Andersen named Faculty of Science Communicator of the Year – University of Copenhagen". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ "The Astrophotography of Peter Clausen". Glimpses of Heaven. Archived from the original on 2013-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ "Kvindernes stjernekriger". Archived from the original on 2013-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ Interview with Anja Cetti Andersen - Author, Professor, and Researcher - Copenhagen University பரணிடப்பட்டது திசம்பர் 11, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Interview with Anja Cetti Andersen". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
- ↑ "JPL Small-Body Database Browser". Ssd.jpl.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ "Anja C. Andersen awarded the H.C. Ørsted Medal". பார்க்கப்பட்ட நாள் 2016-10-24.
- ↑ "Stjerneformidler Anja C. Andersen får Fakultetets formidlingspris – Niels Bohr Institutet - Københavns Universitet". Archived from the original on 2021-02-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ "Anja Andersen hædres for sublim formidling – Niels Bohr Institutet - Københavns Universitet". பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ "Andersen, Anja Cetti - Kvindernes Blåbog". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ "Anja Cetti Andersen received in 2008 DMs research award in science". Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ "International Council of Academies of Engineering and Technological Sciences, Inc. (CAETS) - Danish Academy of Technical Sciences (ATV)". CAETS. 1970-01-01. Archived from the original on 2013-03-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ Danish Radio "lectures prize"
- ↑ "Dansk Kvindebiografisk Leksikon - Kirstine Meyer". 1941-09-28. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ "JCI Danmark". பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
- ↑ 2005 EU Descartes Prize for Science Communication Laureates
- ↑ Research Communication Award
- ↑ "Teaching Middle Prize 2003". Archived from the original on 2018-09-11. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
- ↑ "Women's Blue Book: Anja Cetti Andersen". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
- ↑ [1]
- ↑ "Awards and honors which Anja C. Andersen has received or been nominated for". Archived from the original on 2010-11-12. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
- ↑ "Research Committees". Nordita. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
- ↑ "Organizations which Anja C. Andersen is a member of". Dark.dark-cosmology.dk. Archived from the original on 2007-03-15. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.