அஞ்சா நீட்ரிங்காஸ்
அஞ்சா நீட்ரிங்காஸ் (Anja Niedringhaus) (12 அக்டோபர் 1965 - 4 ஏப்ரல் 2014) அசோசியேட்டட் பிரஸ்ஸில் பணிபுரிந்த ஒரு ஜெர்மன் புகைப்பட பத்திரிகையாளர் ஆவார்.[1][2][3][4] ஈராக் போரின் புகைப்படம் எடுத்ததற்காக 2005 புலிட்சர் பரிசை வென்ற 11 அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞர்கள் குழுவில் இருந்த ஒரே பெண் இவர்தான்.[5]அதே ஆண்டு இவருக்கு சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் தைரியமான பத்திரிகையாளர் பரிசு வழங்கப்பட்டது.[6]
அஞ்சா நீட்ரிங்காஸ் | |
---|---|
பிறப்பு | 12 அக்டோபர் 1965 Höxter |
இறப்பு | 4 ஏப்பிரல் 2014 (அகவை 48) |
பணி | ஒளிப்படக் கலைஞர் |
வேலை வழங்குபவர் |
|
விருதுகள் | Pulitzer Prize for Breaking News Photography, Golden Feather, Courage in Journalism Award, Nieman Fellowship |
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, ஆப்கானித்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் பணியாற்றியபோது ஆப்கானித்தான் காவலர் ஒருவர் சோதனைச் சாவடியில் இவர் காத்திருந்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, இவர் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு பல வருடங்களாக ஆப்கானித்தானை சுற்றி வந்துள்ளார்.[7]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅஞ்சா நீட்ரிங்காஸ் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாக்ஸ்டரில் பிறந்தார். மேலும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது 17 வயதில் சுதந்திரமான புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டில், ஜெர்மன் செய்தித்தாளான கோட்டிங்கர் டேஜ்ப்லாட்டிற்காக பெர்லின் சுவர் இடிந்து விழுந்ததை இவர் விவரித்தார். [6]
தொழில்
தொகு1990 இல் ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள ஐரோப்பிய பிரஸ்போட்டோ ஏஜென்சியில் சேர்ந்தபோது புகைப்பட பத்திரிகையாளராக முழுநேர வேலையைத் தொடங்கினார். அதில் தலைமை புகைப்படக் கலைஞராக தனது தொழில் வாழ்க்கையின் முதல் பத்து ஆண்டுகளை முன்னாள் யூகோஸ்லாவியாவில் நடந்த போர்களுக்காகச் செலவிட்டார்.[6]
2001 ஆம் ஆண்டில், நியூயார்க் நகரில் நடந்த செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் பின்விளைவுகளை புகைப்படம் எடுத்த நீட்ரிங்ஹாஸ், பின்னர் ஆப்கானித்தானுக்குச் சென்றார். அங்கு தலிபான்களின் வீழ்ச்சியைப் பற்றி புகைப்படம் எடுக்க மூன்று மாதங்கள் செலவிட்டார். [6] 2002 இல், அசோசியேட்டட் பிரஸ்ஸில் சேர்ந்து ஈராக், ஆப்கானித்தான், காசாக்கரை, இஸ்ரேல், குவைத்து மற்றும் துருக்கியில் பணியாற்றினார்.[6] 23 அக்டோபர் 2005 அன்று, நியூயார்க்கில் நடந்த ஒரு விழாவில் அமெரிக்க ஒலிபரப்பாளர் பாப் ஸ்கீஃபரிடமிருந்து சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் தைரியமான பெண் ஊடகவியலாளர் விருதைப் பெற்றார். [6]
இறப்பு
தொகு2014இல் ஆப்கானித்தான் குடியரசுத் தலைவர் தேர்தலின்]] போது நடைபெற்ற தாக்குதலில் தனது 48 வயதில் கொல்லப்பட்டார்.[2][3][7][8] சக பத்திரிக்கையாளர், 60 வயதான கனேடியரான கேத்தி கேனன் என்பவரும் தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார். [1][4] [9]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Kim Gaeml (4 April 2014). "AP Photographer Anja Niedringhaus Killed, Reporter Kathy Gannon Shot in Afghanistan". HuffPost இம் மூலத்தில் இருந்து 30 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141030043049/http://www.huffingtonpost.com/2014/04/04/ap-photographer-anja-niedringhaus-killed-kathy-gannon-shot_n_5089336.html.
- ↑ 2.0 2.1 DL Cade (4 April 2014). "Veteran AP Photographer Killed by Afghan Policeman Who Opened Fire on Her Vehicle". Peta Pixel இம் மூலத்தில் இருந்து 7 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407231006/http://petapixel.com/2014/04/04/veteran-ap-photographer-killed-afghan-policeman-opened-fire-vehicle/.
- ↑ 3.0 3.1 Michael Edwards (4 April 2014). "Two female foreign journalists shot in Afghanistan, one dead". Australian Broadcasting Corporation இம் மூலத்தில் இருந்து 5 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140405073320/http://www.abc.net.au/news/2014-04-04/female-foreign-journalists-shot-in-afghanistan-election/5368674.
- ↑ 4.0 4.1 "Kathy Gannon, Canadian-born journalist, wounded in Afghanistan, colleague, photographer Anja Niedringhaus, killed". National Post. 4 April 2014. http://news.nationalpost.com/2014/04/04/kathy-gannon-canadian-born-journalist-wounded-in-afghanistan-colleague-photographer-anja-niedringhaus-killed/.
- ↑ "The 2005 Pulitzer Prize Winners: Breaking News Photography". The Pulitzer Prizes. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "2005 Courage in Journalism Award: Anja Niedringhaus, Germany". International Women's Media Foundation. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014.
- ↑ 7.0 7.1 "Afghan elections: two foreign journalists shot on eve of polls". The Daily Telegraph. 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014.
- ↑ Anja Niedringhaus: Deutsche Fotografin in Afghanistan erschossen, zeit.de, retrieved 4 April 2014 (in இடாய்ச்சு மொழி)
- ↑ "Death sentence given in AP photographer's killing". Yahoo News. 23 July 2014 இம் மூலத்தில் இருந்து 23 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140723221826/http://news.yahoo.com/death-sentence-given-ap-photographers-killing-161651551.html.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அஞ்சா நீட்ரிங்காஸ்
- வார்ப்புரு:LCAuth
- Bicker, Phil (4 April 2014). "In Memoriam: Anja Niedringhaus (1965—2014)". LightBox. Time. Archived from the original on 4 April 2014.
- Story about Niedringhaus by NPR Berlin