அஞ்சுதா
அஞ்சுதா (Anjuta) கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையில் அமைந்த பலதரப்பட்ட சிறப்பம்சங்களையுடைய ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல் (Integrated Development environment -IDE) ஆகும். இது சி, சி++ போன்ற உயர்கணிணி மொழியில் நிரல் எழுதவும், குனோம் பணிச்சூழலுக்கான செயலிகளை கிளெடு(ஆங்கிலம்:glade) மூலம் உருவாக்கவும் உதவும் ஒருங்கிணைந்த உற்பத்திச்சூழல் ஆகும். இதன் மற்றசில உயர் சிறப்பம்சங்களாவன திட்ட மேலாண்மை (Project management), ஒருங்கிணைந்த கிளேடு பயனர் இடைமுகப்பு வடிவமைப்பி, பிழைதிருத்தி(Debuger), திறன்மிக்க நிரல் திருத்தி, நிரல் தேடல் மேலும் பல.[1][2][3]
அஞ்சுதா மணிப்பூரை சேர்ந்த நபகுமார் என்ற இந்தியரால் உருவாக்கப்பட்டு இன்று பலதரப்பட்ட குனோம் மென்பொருள் உருவாக்குனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா கட்டற்ற / திறந்த மென்பொருள் துறையில் எந்தவித பங்களிப்பையும் தரவில்லை பயனை மட்டுமே அனுபவிக்கிறது என்ற அவப்பெயரை நீக்கும் வகையில் இது போன்ற பல சிறந்த மென்பொருட்கள் தற்போது இந்தியரால் உருவாக்கப்பட்டுவருகிறது.
மற்ற சில கட்டற்ற / திறந்த ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல்கள்
- எக்லிப்ஸ் (eclipse)
- நெட்பீன்ஸ் (netbeans)
அம்சங்கள்
தொகுஅஞ்சுதாவின் அம்சங்கள்,
- பிழைதிருத்தி(Debuger)
- திறன்மிக்க நிரல் திருத்தி
- நிரல் தானியங்கு நிறைவு
- வழிகாட்டிகள்[4]
- நிரல் சிறப்பித்தல்
வெளிஇணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Stiebert, Julius (12 March 2008). "Gnome 2.22 mit Desktop-Effekten" (in ஜெர்மன்). Golem.de. பார்க்கப்பட்ட நாள் 23 February 2012.
- ↑ "Archived Anjuta project homepage". 2022-11-07.
- ↑ "Archival Notice".
- ↑ Ganslandt, Björn, "GNOME Fifth-Toe 1.4 » LinuxCommunity", LinuxCommunity (in ஜெர்மன்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-15