அஞ்சு சோசப்

அஞ்சு ஜோசப் (Anju Joseph) என்பவர் ஓர் இந்திய பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாள திரைத்துறையை சார்ந்தவர் ஆவார். 2011 இல் மலையாளத் திரைப்படமான டாக்டர் லவ் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் [1]

அஞ்சு சோசப்
பின்னணித் தகவல்கள்
பிறப்புகாஞ்சிரப்பள்ளி, கேரளா, இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)பியானோ
இசைத்துறையில்2007 – தற்போது

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

அஞ்சு சோசப் காஞ்சிரப்பள்ளியில் உள்ள செயின்ட் சோசப் பப்ளிக் பள்ளியிலும், செயின்ட் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார் மேலும் எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கொச்சி மகாராசா கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[2]

அஞ்சு, ஏசியாநெட் ஐடியா ஸ்டார் சிங்கர் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்,[3] மேலும் அவர் கந்தர்வ சங்கீதம் நிகழ்ச்சியின் மூன்றாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ரியாலிட்டி ஷோ இயக்குனராக இருந்த அனூப் ஜானை அஞ்சு திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிரிந்தனர். அவர் இப்போது ஆதித்யா பரமேசுவரனை மணந்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. M, Athira (2017-06-22). "Experiments with music" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/music/anju-joseph-on-her-a-cappella-band-and-her-journey-with-music/article19123800.ece. 
  2. "വിവാഹശേഷം മുസ്‌ലിം ആയോ? അഞ്ജു മനസ്സ് തുറക്കുന്നു".
  3. Manmadhan, Prema (4 August 2010). "The new singing stars". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/The-new-singing-stars/article16119649.ece. 
  4. "Malayalam singer Anju Joseph is married, shares wedding photo" (in en). India Today. 30 November 2024. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/malayalam-singer-anju-joseph-wedding-aditya-photo-2642858-2024-11-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சு_சோசப்&oldid=4171170" இலிருந்து மீள்விக்கப்பட்டது