அஞ்சு பாபி ஜார்ஜ்

அஞ்சு பாபி ஜார்ஜ் (பிறப்பு 19 ஏப்ரல் 1977) ஒர் இந்தியத் தடகள வீராங்கனை ஆவார். 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் வென்ற முதல் இந்திய தடகள வீரர் ஆவார். 2003-04 -ம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.

அஞ்சு பாபி ஜார்ஜ்
தனித் தகவல்கள்
பிறந்த நாள்19 ஏப்ரல் 1977 (1977-04-19) (அகவை 43)
பிறந்த இடம்சங்கனாச்சேரி, கேரளா, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா

தனி வாழ்க்கைதொகு

அஞ்சு ராபர்ட் பாபி ஜார்ஜ்-ஐ மணந்தார், மும்முறைத் தாண்டுதல் போட்டியில் முன்னாள் தேசிய வெற்றியாளரான இவர் அஞ்சுவின் பயிற்றுனரும் ஆவார். தற்போது அஞ்சு இந்திய சுங்கத் துறையில் பணிபுரிகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சு_பாபி_ஜார்ஜ்&oldid=2715631" இருந்து மீள்விக்கப்பட்டது