ராஜீவ் காந்தி கேல் ரத்னா

இந்தியக் குடியரசில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா(முன்பு:ராஜீவ் காந்தி கேல் ரத்னா) இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது.இது 2021ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடி அரசால் செய்யப்பட்டது .இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் 750,000க்கு கூட்டப்பட்டது.[1]

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா
படிமம்:Major Dhiyan Chand Khel Ratna Award.jpg
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு விளையாட்டு (தனிநபர்/ குழு)
நிறுவியது 1991 - 1992
முதலில் வழங்கப்பட்டது 1991 - 1992
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு 750,000
விவரம் இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருது.
முதல் வெற்றியாளர்(கள்) விசுவநாதன் ஆனந்த்
கடைசி வெற்றியாளர்(கள்) ககன் நரங்
விருது தரவரிசை
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னாஅருச்சுனா விருது

1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேர்வு முறைதொகு

நடுவண் அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கிறது. பொதுவாக ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரையிலான காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.ஒலிம்பிக் விளையாட்டுக்கள்,ஆசிய விளையாட்டுகள் அல்லது பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விளையாட்டொன்றில் அந்த நபரோ குழுவோ பங்கெடுத்திருக்க வேண்டும்.விளையாட்டையே பணிவாழ்வாகக் கொண்ட பில்லியர்ட்ஸ்,சுனூக்கர் மற்றும் சதுரங்க வீரர்களும் தேர்வுக்கு உரியவர்கள்.இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும்.தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.[2] தேர்வுக்குழு தனது பரிந்துரையை அரசிற்கு அனுப்பியபின், அரசின் பல மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின், குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கே வழங்கப்படல் வழக்கம் என்றபோதிலும் விலக்குகள் உள்ளன.[3] எந்த விளையாட்டு வீரருமே வேண்டிய தகுதிகளைப் பெறவில்லையாயின் விருது அந்த ஆண்டிற்கு கொடுக்கப்படாது இருக்கலாம்.

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பட்டியல்தொகு

வ.எண். ஆண்டு விளையாட்டு வீரர்(கள்) விளையாட்டு துறை
01 1991-92 விசுவநாதன் ஆனந்த் சதுரங்கம்
02 1992-93 கீத் சேத்தி பில்லியடு
03 1993-94 வழங்கப்படவில்லை* -
04 1994-95 ஹோமி மோதிவாலா மற்றும் பி. கே. கர்க் பாய்மரப் படகோட்டம் (குழு நிகழ்வு)
05 1995-96 கர்ணம் மல்லேசுவரி பளு தூக்குதல்
06 1996-97 லியாண்டர் பயஸ் மற்றும் நாமேரிக்பம் குஞ்சராணி (இணைந்து) முறையே டென்னிசு மற்றும் பளு தூக்குதல்
07 1997-98 சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்
08 1998-99 சோதிர்மயீ சிக்தார் தட கள விளையாட்டுக்கள்
09 1999-2000 தன்ராசு பிள்ளை ஹாக்கி
10 2000-01 புல்லேலா கோபிசந்த் இறகுப் பந்தாட்டம்
11 2001-02 அபினவ் பிந்த்ரா சுடுதல்
12 2002-03 அஞ்சலி வேத் பதக் பாக்வத் மற்றும் கே. எம். பீனாமோல் (இணைந்து) முறையே சுடுதல் மற்றும் தட கள விளையாட்டுக்கள்
13 2003-04 அஞ்சு பாபி ஜார்ஜ் தட கள விளையாட்டுக்கள்
14 2004-05 ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் சுடுதல்
15 2005-06 பங்கஜ் அத்வானி பில்லியடும் சுனூக்கரும்
16 2006-07 மானவ்ஜித் சிங் சாந்து சுடுதல்
17 2007-08 மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்
18 2008-09 மேரி கோம், சுசீல் குமார், விஜேந்தர் குமார் முறையே குத்துச்சண்டை, மல்யுத்தம், குத்துச்சண்டை
19 2009-10 சாய்னா நேவால் இறகுப் பந்தாட்டம்
20 2010-11 ககன் நரங் சுடுதல்
21 2011-12 விஜய் குமார், யோகேசுவர் தத் முறையே சுடுதல், மல்யுத்தம்
22 2012-13 ரஞ்சன் சோதி சுடுதல்
22 2014-15 சானியா மிர்சா

2017. - தேவேந்திர ஜஜாரியா(PARA)

2017. - சர்தார்சிங்

  • 1993-94 ஆண்டில் இவ்விருது வழங்கப்படவில்லை.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. அமைச்சரவை, இளைஞர் மற்றும் விளையாட்டு (2005-08-30). "விருதுகள்– ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது" (HTML). தேசிய தகவலியல் மையம். மூல முகவரியிலிருந்து 2005-11-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-05-15.
  2. Tamil Nadu, Sports Development Authority of. "Rajiv Gandhi Khel Ratna Award" (ASP). பார்த்த நாள் 2006-05-15.
  3. WEBINDIA123.COM. "Rajiv Gandhi Khel Ratna Award" (HTML). பார்த்த நாள் 2006-05-15.

உசாத்துணைகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு