சானியா மிர்சா

இந்திய டென்னிசு வீராங்கனை

சானியா மிர்சா (Sania Mirza ˈˈsaːnɪja ˈmɪrza; பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெருவெற்றித் தொடர் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார்.[3][4] மகளிர் டென்னிசு சங்க தகவலின்படி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்திய ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.[5][6]

சானியா மிர்சா
2017இல் மிர்சா
நாடு India
வாழ்விடம்ஐதராபாத்து (இந்தியா)
பிறப்பு15 நவம்பர் 1986 (1986-11-15) (அகவை 37)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உயரம்1.73 மீட்டர்கள் (5 அடி 8 அங்)[2]
தொழில் ஆரம்பம்பெப்ரவரி, 2003
விளையாட்டுகள்வலக்கை (two-handed backhand)
Collegeபுனித மேரி கல்லூரி, ஐதராபாத்து
பரிசுப் பணம்US$ 7,215,984
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்271–161 (62.73%)
பட்டங்கள்1
அதிகூடிய தரவரிசைNo. 27 (ஆகஸ்ட் 27, 2007)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2005, 2008)
பிரெஞ்சு ஓப்பன்2R (2007, 2011)
விம்பிள்டன்2R (2005, 2007, 2008, 2009)
அமெரிக்க ஓப்பன்4R (2005)
ஏனைய தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்1R (2008)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்531–242 (68.69%)
பட்டங்கள்43
அதியுயர் தரவரிசைNo. 1 (13 April 2015)
தற்போதைய தரவரிசைNo. 24 (8 August 2022)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (2016)
பிரெஞ்சு ஓப்பன்F (2011)
விம்பிள்டன்W (2015)
அமெரிக்க ஓப்பன்W (2015)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour FinalsW (2014, 2015)
ஒலிம்பிக் போட்டிகள்2R (2008)
கலப்பு இரட்டையர்
பட்டங்கள்3
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (2009)
பிரெஞ்சு ஓப்பன்W (2012)
விம்பிள்டன்SF (2022)
அமெரிக்க ஓப்பன்W (2014)
ஏனைய கலப்பு இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்SF (2016)
இற்றைப்படுத்தப்பட்டது: 13 August 2022.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சானியா மிர்சா 1986 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் ஐதராபாத் முஸ்லிம் பெற்றோர்களான இம்ரான் மிர்சா, நசீமா ஆகிய தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை பத்திரிகையாளர், தாய் அச்சு வணிகத்தில் பணிபுரிந்தார்.[7] இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவரது குடும்பம் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்தது, அங்கு இவரும் இளைய சகோதரி ஆனமும் சுன்னி முஸ்லீம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டனர். இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீனின் மகன் கிரிக்கெட் வீரர் முகமது அசாதுதீனை ஆனம் மணந்தார்.[8] இவர் இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்டத் தலைவர்கள் குலாம் அகமது மற்றும் பாகிஸ்தானின் ஆசிப் இக்பால் ஆகியோரின் தூரத்து உறவினர் ஆவார்.[9] ஆறு வயது முதல் டென்னிசு விளையாடுகிறார். தனது தந்தை மற்றும் ரோஜர் ஆண்டர்சனால் பயிற்சி பெற்றார்.

ஐதராபாத்தில் உள்ள நாசர் பள்ளியில் பயின்றார். பின்னர் ஐதராபாத் புனித மேரி கல்லூரியில் பட்டம் பெற்றார். மிர்சா டிசம்பர் 11, 2008இல் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து கௌரவ முனைவர் பட்டம் பெற்றார்.[10] டென்னிசு தவிர, மிர்சா கிரிக்கெட் மற்றும் நீச்சலிலும் சிறந்தவர்.

டென்னிசு வாழ்க்கை

தொகு

சானியா மிர்சா தனது ஆறாவது வயதில் டென்னிசு விளையாடத் தொடங்கினார், 2003 இல் தொழில்முறை விளையாட்டில் ஈடுபட்டார். தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார். மிர்சா இளையோர் பிரிவில் 10 ஒற்றையர் மற்றும் 13 இரட்டையர் பட்டங்களை வென்றார். அவர் 2003 விம்பிள்டன் வாகையாளர் பெண்கள் இரட்டையர் பட்டத்தை, அலிசா கிளேபனோவாவுடன் இணைந்து வென்றார். அவர் 2003 யுஎஸ் ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சனா பாம்ப்ரியுடன் அரையிறுதி வரையிலும், 2002 யுஎஸ் ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதி வரையில் விளையாடினார்.

2004ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐதராபாத் ஓபன் தொடரில் நிக்கோல் பிராட்டிற்கு எதிராக சிறப்பாக விளையாடினார். ஆனால் மூன்று செட்களில் அந்தப் போட்டியில் தோல்வியடைந்தார். இதே தொடரில் லிசேல் ஹூபருடன் இணைந்து WTA இரட்டையர் பட்டத்தை வென்றார்.

விருதுகள், அங்கீகாரங்கள்

தொகு

2014 ஆம் ஆண்டு தெலுங்கானா அரசு சானியா மிர்சாவை அம்மாநிலத்தின் விளம்பர தூதராக நியமித்தது.[18] டைம் இதழின் 2016 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பெயரிடப்பட்டார்.[19]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2009 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சோயப் மாலிக்குடன் சானியா மிர்சா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஏப்ரல் 2,2012இல் இசுலாமிய முறைப்படி ஐதராபாத்தில் சோயப் மாலிக்கை 6.1மில்லியன் (அமெரிக்க$137,500) செலவில் திருமணம் செய்தார்.[20] இவர்களின் வாலிமா விழா பாக்கித்தானின் சியால்கோட்டில் நடைபெற்றது [21]

இந்தத் தம்பதியினர் 23 ஏப்ரல் 2018 அன்று சமூக ஊடகங்களில் தங்கள் முதல் கர்ப்பத்தை அறிவித்தனர் [22][23] அக்டோபர் 2018 இல், சோயிப் மாலிக் டுவிட்டரில் மிர்சா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அறிவித்தார் மற்றும் அவருக்கு இசான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டார்.[24][25][26][27]

பிற செயல்பாடுகள்

தொகு

2014 ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தின் நலன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திற்கான விளம்பரத் தூதராக மிர்சா இருந்தார்.[28]

மிர்சா ஐதராபாத்தில் டென்னிசு அகாதமியை நிறுவியுள்ளார்.[29] முன்னாள் உலக நம்பர் 1 மற்றும் பல கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர்களான காரா பிளாக் மற்றும் மார்டினா நவரதிலோவா இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அகாதமிக்கு வருகை தந்துள்ளனர்.[30]

சான்றுகள்

தொகு
 1. "Overview | Sania Mirza | WTA Official". Women's Tennis Association. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 24, 2019.
 2. "Sania Mirza". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 3. "Hingis & Mirza Win, Mirza Becomes No.1". Women's Tennis Association. 12 April 2015 இம் மூலத்தில் இருந்து 14 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150414015756/http://www.wtatennis.com/news/article/4634188/title/hingis-mirza-win-mirza-becomes-no1. 
 4. "Sania Mirza Martina Hingis Wins Women's Doubles Title". Mana Telangana (Hyderabad, India). 12 July 2015 இம் மூலத்தில் இருந்து 12 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150712062226/http://www.telangananewspaper.com/sania-mirza-martina-hingis-wins-womens-doubles-title/. 
 5. Gibbs, Lindsay (14 January 2015). "Fatwas, Feminism, and Forehands: The Life of Indian Tennis Superstar Sania Mirza". Vice.com. பார்க்கப்பட்ட நாள் 31 May 2020.
 6. Chanda, Kathakali (23 December 2014). "Sania Mirza: The queen of her court". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 31 May 2020.
 7. Tolasaria, Vatsal (8 September 2018). "Interview with Imran Mirza (Sania Mirza's Dad)". Indian Tennis Daily. https://indiantennisdaily.com/2018/09/08/interview-with-imran-mirzasania-mirzas-dad/. 
 8. "Mohammad Azharuddin's son Asad marries Sania Mirza's sister Anam; see pics and videos". Deccan Chronicle. 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 15 December 2019.
 9. "Sania and the great cricket connection". mid-day.com.
 10. "Sport : Sania Mirza gets a doctorate". தி இந்து (Chennai, India). 12 December 2008 இம் மூலத்தில் இருந்து 14 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081214200050/http://www.hindu.com/2008/12/12/stories/2008121255701700.htm. 
 11. "Sania Mirza ranks World No. 1: Interesting facts you must know about her". India Today. April 13, 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
 12. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
 13. "Telangana brand ambassador Makes india Proud". TNP LIVE. 11 August 2015. http://www.telangananewspaper.com/rajiv-gandhi-khel-ratna-award-for-saniamirza/. 
 14. "Dhyan Chand Award: Rajiv Gandhi Khel Ratna Award renamed Major Dhyan Chand Khel Ratna Award | India News – Times of India". The Times of India. https://m.timesofindia.com/india/rajiv-gandhi-khel-ratna-award-renamed-major-dhyan-chand-khel-ratna-award/articleshow/85093875.cms. 
 15. "BBC 100 Women 2015: Who is on the list?". 17 November 2015. https://www.bbc.com/news/world-34745739. 
 16. "Humbled, says Sania Mirza after accepting Padma Bhushan". India Today. April 12, 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
 17. "Aishwarya wins Global Indian of the Year award". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
 18. "KCR congratulated Sania Mirza on her being awarded Rajiv Gandhi Khel Ratna award – indtoday.com – INDToday". indtoday.com.
 19. "The 100 Most Influential People in the World". http://time.com/collection/2016-time-100/. 
 20. "Shoaib Malik finally married with Sania Mirza on 12 Apr". 13 April 2010 இம் மூலத்தில் இருந்து 16 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100416155151/http://www.todaynews.in/national/shoaib-malik-finally-married-with-sania-mirza-on-12-apr-62985.html. 
 21. "Shoania valima reception held". The Express Tribune. 26 April 2010. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
 22. "Sania Mirza announces pregnancy on Twitter". The Indian Express. 23 April 2018. http://indianexpress.com/article/sports/tennis/sania-mirza-pregnant-child-shoaib-malik-5148548/. 
 23. "Sania Mirza on Instagram: "#BabyMirzaMalik 👶🏽❤️ @daaemi"". Instagram. Archived from the original on 2022-10-19. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 24. "Sania Mirza and Shoaib Malik decide name of their baby boy". https://www.indiatoday.in/sports/cricket/story/sania-mirza-shoaib-malik-baby-boy-name-1378756-2018-10-30. 
 25. "Sania Mirza Delivers A Healthy Baby Boy, Excited Father Shoaib Malik Expresses Joy on Twitter". LatestLY. 30 October 2018. பார்க்கப்பட்ட நாள் 30 October 2018.
 26. "Wishes pour in as Sania Mirza and Shoaib Malik welcome 'Baby Mirza Malik'". SportsWallah. 30 October 2018. பார்க்கப்பட்ட நாள் 30 October 2018.
 27. "Sania Mirza Welcomes Her Baby Boy". IndToday.com. 30 October 2018.
 28. "indtoday". பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
 29. "Sania Mirza ~ The Glamorous Star of Indian Tennis". DESIblitz. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
 30. "Sania Mirza and I would have made a good team too, says tennis legend Martina Navratilova". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சானியா_மிர்சா&oldid=3742057" இலிருந்து மீள்விக்கப்பட்டது