புல்லேலா கோபிசந்த்

புல்லேலா கோபிசந்த் (Pullela Gopichand, தெலுங்கு: పుల్లెల గొపీచంద్) (பிறப்பு நவம்பர் 16, 1973, பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்.

புல்லேலா கோபிசந்த்
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்புநவம்பர் 16, 1973 (1973-11-16) (அகவை 51)
நாகாந்தலா, பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
உயரம்1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)
கரம்வலக்கரம்
ஆடவர் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்5[1] (15 மார்ச்சு 2001)
இ. உ. கூ. சுயவிவரம்

2001ஆம் ஆண்டில் அனைத்து இங்கிலாந்து ஓப்பன் இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் சீன மக்கள் குடியரசின் சென் ஹாங்கை நேர் ஆட்டங்களில் வென்று கட்டத்தைக் கைப்பற்றினார்.[2] 1980இல் இச்சாதனையைப் புரிந்த பிரகாஷ் பதுகோனேக்கு அடுத்த இந்தியராக விளங்கினார்..[3][4] இதற்காக 2001ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5] பின்னர் இவரது ஆட்டம் காயங்களால் பாதிக்கப்பட்டதால் 2003ஆம் ஆண்டில் தரவரிசையில் 126ஆவதாக கீழிறங்கினார். 2005ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[6]

தற்போது தான் நிறுவிய கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் இளம் ஆட்டக்காரர்களுக்கு பயிற்சிகள் அளித்து வருகிறார்.[4] இறகுப்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற பயிற்சியாளராக விளங்கும் இவருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டுள்ளது. சாய்னா நேவால், பி.வி.சிந்து, பாருபள்ளி காசியப் ஆகியோரின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார்.[7][8] இவரது வாழ்க்கை வரலாற்றை முன்னாள் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்களான சஞ்சய் சர்மாவும் சாச்சி சர்மாவும் இணைந்து "புல்லேலா கோபிசந்த்: உலகம் அவரது காலடியில்" என்ற நூலாக வெளியிட்டுள்ளனர்.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Historical Ranking". Badminton World Federation. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Pulella Gopichand". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
  3. "P Gopichand". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 December 2002. http://timesofindia.indiatimes.com/P-Gopichand/articleshow/30977688.cms. பார்த்த நாள்: 7 February 2010. 
  4. 4.0 4.1 "Pullela Gopichand – The Founder". Gopichand Badminton Academy. Archived from the original on 24 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Gopichand completes rare treble with Dronacharya". இந்தியன் எக்சுபிரசு. 21 July 2009. http://www.indianexpress.com/news/gopichand-completes-rare-treble-with-dronacharya/491904/. பார்த்த நாள்: 7 February 2010. 
  6. "Padma Shri Awardees". இந்திய அரசு. Archived from the original on 29 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Better coaching, big events acting as a booster: Gopichand". இந்தியன் எக்சுபிரசு. 4 December 2009. http://www.indianexpress.com/news/better-coaching-big-events-acting-as-a-booster-gopichand/549874/0. பார்த்த நாள்: 7 February 2010. 
  8. "Gopi Chand believes India can make it to Group II". த இந்து. 7 May 2009 இம் மூலத்தில் இருந்து 3 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090803163946/http://www.hindu.com/2009/05/07/stories/2009050756451600.htm. பார்த்த நாள்: 7 February 2010. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்லேலா_கோபிசந்த்&oldid=3564265" இலிருந்து மீள்விக்கப்பட்டது