ககன் நரங்
ககன் நரங் (Gagan Narang, பஞ்சாபி:ਗਗਨ ਨਾਰੰਗ இந்தி: गगन नारंग ) சென்னையில் பிறந்த ஓர் இந்திய பஞ்சாபி சுடுதல் விளையாட்டு வீரராவார்.இவர் ஹைதராபாத்தில் வளர்ந்தார். இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கொண்டவர்.
ககன் நரங் | |
---|---|
பிறப்பு | 6 மே 1983 சென்னை |
தேசியம் | இந்தியர் |
பணி | துப்பாக்கி சுடுதல் |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
ஆடவர் சுடுதல் | ||
பொதுநலவாய விளையாட்டுக்கள் | ||
2006 மெல்பேர்ண் | 10மீ வளிமத் துப்பாக்கி தனிநபர் | |
2006 மெல்பேர்ண் | 10மீ வளிமத் துப்பாக்கி (சோடி) | |
2006 மெல்பேர்ண் | 50மீ துப்பாக்கி 3 இலக்கு தனிநபர் | |
2006 மெல்பேர்ண் | 50மீ துப்பாக்கி 3 இலக்கு (சோடி) [1] | |
2010 தில்லி | 10மீ வளிமத் துப்பாக்கி தனிநபர் | |
2010 தில்லி | 10மீ வளிமத் துப்பாக்கி (சோடி) | |
2010 தில்லி | 50மீ துப்பாக்கி 3 இலக்கு தனிநபர் | |
2010 தில்லி | 50மீ துப்பாக்கி 3 இலக்கு (சோடி) |
2009ஆம் ஆண்டில் தமக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கொடுக்கப்படாததற்காக தனது எதிர்ப்பை காட்டும் விதமாக 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கெடுக்க மறுத்தார்[2][3]. பின்னர் இந்த விளையாட்டுக்களில் பங்கெடுத்து 10மீ வளிமத் துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை நிகழ்த்தினார்.
ஆரம்ப காலம்
தொகுசென்னையில் பிறந்த இவர் மெரினா கடற்கரையில் பலூன் சுடும் விளையாட்டில் ஆர்வம் காட்டினார். இந்த ஆர்வமே அவர் துப்பாக்கி சுடும் வீரராக அவரை மாற்றியது.
வெற்றிகள்
தொகுககன் நரங் 2003-ஆம் ஆண்டு ஆப்ரிக்க ஆசிய போட்டியில் பத்து மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தங்கம் வென்று சர்வதேச தளத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.2006 உலக கோப்பை போட்டியில் 704.3 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படத்தார்.அத்துடன் தங்கமும் வென்றார்.2012 ஒலிம்பிக் போட்டியில் பத்து மீட்டர் ஏர் ரைபில் இறுதி போட்டியில் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
விருதுகள்
தொகுஇவரது சேவையைப் பாராட்டி 2010ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[4] ஆகத்து 29, 2011 அன்று இவருக்கு விளையாட்டுத் துறையில் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Who is Gagan Narang". Hindustan Times. 2010-10-05 இம் மூலத்தில் இருந்து 2010-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006231104/http://www.hindustantimes.com/Who-is-Gagan-Narang/Article1-608482.aspx. பார்த்த நாள்: 2010-10-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-07. பார்க்கப்பட்ட நாள் 2011-08-29.
- ↑ "Gagan Narang threatens to skip Commonwealth Games". The Times Of India. http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/commonwealth-games/top-stories/Gagan-Narang-threatens-to-skip-Commonwealth-Games/articleshow/6266191.cms.
- ↑ "Padma Shree for Gagan Narang". January 25, 2011 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 1, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120801230216/http://headlinesindia.mapsofindia.com/social-interest-news/awards/padma-shri-will-motivate-me-for-london-olympics-says-gagan-narang-73875.html.
- ↑ "ககன் நரங்குக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா". ஆகத்து 29, 2011. http://www.bbc.co.uk/tamil/sport/2011/08/110829_narangaward.shtml.