தீபா மாலிக்

தீபா மாலிக் (Deepa Malik) [பிறப்பு: 30 செப்டம்பர், 1970] இந்தியாவின் அரியானாமாநிலத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் 4.61 மீட்டர் தூரத்திற்குக் குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தவர். ஈட்டி எறிதல், நீச்சல், மோட்டர் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றிலும் வல்லவர். சிறந்த பேச்சாளரும் ஆவார்.[1]

தீபா மாலிக்
தனிநபர் தகவல்
முழு பெயர்தீபா மாலிக்
பிறப்பு30 செப்டம்பர் 1970 (1970-09-30) (அகவை 53)
Bhaiswal, சோனிபத் மாவட்டம், அரியானா, இந்தியா
வசிப்பிடம்புது தில்லி
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)குண்டு எறிதல் (விளையாட்டு), ஈட்டி எறிதல் (விளையாட்டு) & Motorcycling
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

தீபா மாலிக் ஒரு மாற்றுத் திறனாளர் ஆவார். அவருடைய இடுப்புக்கு கீழே உறுப்புகள் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியின் உதவியினால் இயங்கி வருபவர். இவரது 26 வயதில் இவரது முதுகுத்தண்டில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை செய்யப்பட்டது.163 தையல்கள் போடப்பட்டன. அறுவைச் சிகிச்சைக்குப் பின் அவரது மார்புப் பகுதிக்கீழே உறுப்புகள் செயலிழந்தன. சக்கர நாற்காலியில் இருந்த படியே குண்டு எறிதல், ஈட்டி எறிதல் முதலிய போட்டிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டார். மாற்றுத்திறனாளர்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றார். தொடர்ந்து தேசிய, சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார். யமுனை நதியில் நீரோட்டத்திற்கு எதிராக ஒருகிலோமீட்டர் தூரம் நீந்தி லிம்கா சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார். பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த தீபா மாலிக் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் மாற்றுத்திறனாளி வீராங்கணை அவர் தான். 2017 மரார்ச் மாதம் இந்தியக் குடியரசுத்தலைவர் கைகளால் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.[2]2019 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது [3] மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கான அருச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4]

வாழ்க்கை தொகு

தீபா மாலிக்கின் கணவர் பிக்ரம் சிங் மாலிக் ஒரு இராணுவ அதிகாரி. மனைவியின் அறுவைச்சிகிச்சையின் போது கார்கில் போரில் போர்க்களத்தில் இருந்தார். அறுவைச்சிகிச்சைக்குப்பின் பணியை விடுத்து மனைவிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.[5] இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

மேற்கோள் தொகு

மேலும் பார்க்க தொகு

https://www.theguardian.com/sport/2012/aug/30/paralympics-2012-india-deepa-malik

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபா_மாலிக்&oldid=3102251" இலிருந்து மீள்விக்கப்பட்டது