கீத் சேத்தி

இந்திய பில்லியர்ட்சு வீரர்

கீத் சேத்தி (Geet Sethi) இந்திய பில்லியர்ட்சு விளையாட்டு வீரர் ஆவார். இவ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கு கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்தியாவின் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

கீத் ஸ்ரீ ராம் சேத்தி
பிறப்பு(1961-04-17)ஏப்ரல் 17, 1961
தில்லி
தேசியம்இந்தியா
பணிபில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர்

பிறப்பு தொகு

கீத் ஸ்ரீ ராம் சேத்தி இந்தியாவின் புது டெல்லியில் 1961-இல் ஒரு பஞ்சாபி குடும்பதில் பிறந்தார். பின் அகமதாபாத்தில் வளர்ந்தார்.

சாதனை தொகு

கீத் சேத்தி ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்; பதக்கங்களையும் வென்றுள்ளார்.

பதக்க சாதனைகள்
ஆண்களுக்கான பில்லியர்ட்ஸ் விளையாட்டு
நாடு   இந்தியா
Asian Games
  1998 Bangkok Teams
  1998 Bangkok Singles
  2002 Busan Teams
  2002 Busan Singles
  2006 Doha Teams

விருது தொகு

1986 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது மற்றும் அருச்சுனா விருதும், 1992 இல் இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், 1993 இல் கே. கே. பிர்லா விருதும் வழங்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Geet Sethi Profile". ILoveIndia.com. pp. "Sport in India" section. பார்க்கப்பட்ட நாள் 30 November 2007.
  2. "Geet Sethi Page". TNQ.in. TNQ Sponsorship (India) Pvt. Ltd. 1998. பார்க்கப்பட்ட நாள் 30 November 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீத்_சேத்தி&oldid=3051100" இலிருந்து மீள்விக்கப்பட்டது