மிதாலி ராஜ்
மிதாலி துரை ராஜ் (Mithali Raj, பிறப்பு: திசம்பர் 3 1982),இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீராங்கனை ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடு வருகிறார்.[1] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பெண் துடுப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் பெண் மட்டையாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார்.[2][3] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு முறை 50 ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார்.[4] மேலும் அதிகமுறை 50 ஓட்டங்கள் எடுத்த வீராங்கனை எனும் சாதனைகளைப் படைத்தார்.[5] 2002 - 2006 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1999 - 2010 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மிதாலி ராஜ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 8) | சனவரி 14 2002 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | செப்டம்பர் 1 2006 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 120) | சனவரி 26 1999 எ. அயர்லாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மார்ச்சு 1 2010 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, மார்ச்சு 15 2010 |
இந்தியத் துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி ஆகிய வீராங்கனைகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிகமுறை இறுதிப் போட்டிகளில் விளையாடிய ஒரே தலைவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் பங்கேற்று இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.[6][7]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமிதாலி துரை ராஜ் டிசம்பர் 3, 1982 இல் சோத்பூர், இராசத்தானில் பிறந்தார். இவர் தமிழ்நாடு மரபைச் சேர்ந்தவர். இவரின் தந்தை துரை ராஜ் இந்திய வான்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரின் தாய் லீலா ராஜ். மிதாலி தனது பத்தாம் வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது 17 ஆவது வயதில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுவதற்குத் தேர்வானார். இவர் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானாவில் வசித்து வருகிறார்..[8][9] இவர்சிக்கந்தராபாத்திலுள்ள கேயெஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின் இங்குள்ளா கஸ்தூர்பா ஜூனியர் பெண்கள் கல்லூரியில் பயின்றார். தனது பள்ளிப்படிப்பின் போது தனது சகோதரகளுடன் இணைந்து துடுப்பாட்டம் விளையாடினார். இவர் பெரும்பாலும் ஆண் துடுப்பாட்டக்காரர்களுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
துடுப்பாட்ட வாழ்க்கை
தொகுஇவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடு வருகிறார்.[1][10] 1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் உலகத் துடுப்பாட்ட உலக்ககிண்ணப் போட்டியில் இவரின் பெயர் இடம்பெறுவதாக இருந்தது. அப்போது இவரின் வயது 14. ஆனால் விளையாடும் அணியில் இவரின் பெயர் இடம்பெறவில்லை.[11] 1999 ஆம் ஆண்டில் மில்டன் கெய்னீசில் நடைபெற்ற அயர்லாந்து பெண்கள்துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப்போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்தார். பின் 2001-2002 இல் லக்னோவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.ஆகத்து 17 ,2002 இல் இவரது மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 214 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த கரேன் ரோல்டனின் சாதனையான 209* என்பதனை தகர்த்தார்.[12] பின் இவரின் சாதனையானது மார்ச் , 2004 இல் பாக்கித்தான் வீராங்கனை கிரன் பாலுச் என்பவர் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 242 ஓட்டங்கள் எடுத்து தகர்த்தார்.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Raj finds life lonely at the top".
- ↑ "Record-setting Raj top of the women's charts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 July 2017.
- ↑ "Mithali Raj becomes leading run-scorer in women's ODI cricket; surpasses England's Charlotte Edwards". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 12 July 2017.
- ↑ "Meshram-Raj and spin quartet to the fore in emphatic India win". International Cricket Council.
- ↑ "Records | Women's One-Day Internationals | Batting records | Most fifties in career | ESPNcricinfo". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018.
- ↑ "India's chance to spur a revolution".
- ↑ "Team of the ICC Women's World Cup 2017 announced".
- ↑ "Mithali Raj on pitch, but 1 1-year wait for 500 yards".
- ↑ "Indian women will play test cricket after eight years, captain Mithali Raj happy". Patrika Group (4 August 2014) இம் மூலத்தில் இருந்து 8 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808053426/http://www.patrika.com/news/indian-women-will-play-test-cricket-after-eight-years-captain-mithali-raj-happy/1021699. பார்த்த நாள்: 4 August 2014.
- ↑ "Thank you, Mithali Raj, for being Indian cricket's evergreen woman in blue".
- ↑ "Mithali Raj – From Bharatnatyam dancer to cricket icon".
- ↑ "Cricinfo – Women's Test Highest Individual Scores". பார்க்கப்பட்ட நாள் 15 February 2017.
- ↑ "Most runs in an innings (progressive record holder) in Women's Test matches". http://stats.espncricinfo.com/ci/content/records/284255.html.