அடல் பிகாரி வாச்பாய் இந்தி விசுவவித்யாலயா
அடல் பிகாரி வாச்பாய் இந்தி விசுவவித்யாலயா (Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது 2011 திசம்பரில் நிறுவப்பட்டது.[2] இந்தி கவிஞரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாச்பாயின் நினைவாக இப்பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.[3] மோகன் லால் சிப்பா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆவார்.[3]
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2011 |
வேந்தர் | மத்தியப் பிரதேச ஆளுநர் |
துணை வேந்தர் | இராம்தேவ் பரத்வாஜ்[1] |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
வளாகம்
தொகு2016ஆம் ஆண்டு நிலவரப்படி, பல்கலைக்கழகம் இரண்டு வாடகை கட்டிடங்களில் தற்காலிகமாகச் செயல்பட்டது. பழைய மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றது. மத்தியப் பிரதேச முங்காலியா கோட் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நிர்வாகப் பணிகள் நடைபெற்று வந்தது. முங்காலியா கோட்டில் 50 ஏக்கர் (0.20 கிமீ2) பரப்பளவில் பல்கலைக்கழகத்திற்காக கட்டிடங்கள் கட்ட 2013-ல் பணிகள் துவங்கியது.[4]
இந்தி மொழி
தொகுஇப்பல்கலைக்கழகம் இந்தி மொழி கல்வியினை ஊக்குவிக்கிறது. 2015ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகத்திடம் இளநிலை மருத்துவப் பாடத்தின் பாடத் தாள்களை இந்தியில் எழுத அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.[2] இருப்பினும் 2017ஆம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததன் காரணமாகவும் உள்கட்டமைப்பு காரணமாகவும் இத்திட்டத்தை நிறுத்துவது குறித்து பல்கலைக்கழகம் பரிசீலித்தது.[5]
படிப்புகள்
தொகுநவம்பர் 2020-ல், பல்கலைக்கழகம் முதலுதவி சிறப்புப் பட்டப் படிப்பினை தில்லியின் இந்திய முதலுதவி குழுவுடன் இணைந்து பிற முதலுதவி படிப்புகளுடன் வழங்கியது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Parida, Rashmi R. (31 July 2017). "Dr. Bharadwaj appointed V-C of Atal Bihari Vajpayee Hindi University - India Education Diary". India Education Diary. https://indiaeducationdiary.in/dr-bharadwaj-appointed-v-c-atal-bihari-vajpayee-hindi-university/.
- ↑ 2.0 2.1 "Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers". இந்தியா டுடே. Press Trust of India. 19 September 2015. http://indiatoday.intoday.in/story/hindi-varsity-urges-mci-to-allow-hindi-for-writing-mbbs-papers/1/477705.html.
- ↑ 3.0 3.1 "Mohan Lal Cheepa named vice-chancellor of Atal Bihari Vajpayee Hindi University". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Press Trust of India. 26 June 2012. http://timesofindia.indiatimes.com/home/education/news/Mohan-Lal-Cheepa-named-vice-chancellor-of-Atal-Bihari-Vajpayee-Hindi-University/articleshow/14413374.cms.
- ↑ .
- ↑ Tomar, Shruti (23 August 2017). "Hindi engineering courses in Bhopal a flop, no takers this year" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/education/hindi-engineering-courses-in-bhopal-university-a-flop-no-takers-this-year/story-tWooNcdfne39NFa8xYhhhM.html.
- ↑ "ABVHU introduces ‘first aid specialist’ diploma, other first aid courses". The Pioneer. 6 November 2020. https://www.dailypioneer.com/2020/state-editions/abvhu-introduces----first-aid-specialist----diploma--other-first-aid-courses.html.
வெளி இணைப்புகள்
தொகு