அடித்தள பூக்கும் தாவரம்

அடித்தள பூக்கும் தாவரம் (தாவர வகைப்பாட்டியல் : basal angiosperms) என்பது இருபெரும் பூக்கும் தாவரப்பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்றுத, இடை பூக்கும் தாவரம் ஆகும். அடித்தள பூக்கும் தாவரம், பெரும்பாலான பூக்கும் தாவரப் பரம்பரையிலிருந்து வேறுபட்டுள்ளது. எனவே, இவை, அனிட்டா தரம் (ANITA) என்று அழைக்கப்படுகின்றன. இது அம்போரெல்லா (நியூ கலிடோனியாவின் புதர் வகை), நிம்ஃபீல்ஸ் (நீர் அல்லிகளும், வேறு சில நீர்வாழ் தாவரங்களும்), ஆசுட்ரோபைலியேல்சு (மர நறுமண தாவரங்கள், சோம்பு(star anise)) ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது. [1]

நிம்பேயா ஆல்பா (Nymphaea alba)

நூறாயிரக்கணக்கான மெய்இருவித்திலி, ஒருவித்திலை, மாக்னோலிட்களுடன்(magnoliids) ஒப்பிடும்போது, இவ்வகைத் தாவரங்கள் சில நூறு இனங்கள் மட்டுமே உள்ளன. இடை பூக்கும் தாவரம் உள்ளடக்கிய ஐந்து குழுக்கள், ஒன்றுக்கொன்று வேறுபடுவதற்கு முன்பு, அவைகள் இம்முன்னோடி பூக்குந்தாவரப் பரம்பரையிலிருந்து பிரிந்துள்ளன.

தாவரத் தொகுதிமரபு

தொகு
 
ஜப்பானிய நட்சத்திர சோம்பு ( இலிசியம் அனிசாட்டம் ,((Illicium anisatum)), ஆஸ்ட்ரோபைலியேல்ஸிலிருந்து

அம்போரெல்லா, நிம்ஃபீல்சு, ஆசுட்ரோபைலியேல்சு என்பன வரிசையில், மற்ற அனைத்து பூக்குந்தாவரங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. [2]

Amborella

Nymphaeales

Austrobaileyales

Mesangiospermae

மேற்கோள்கள்

தொகு
  1. Thien, L. B.; Bernhardt, P.; Devall, M. S.; Chen, Z.-d.; Luo, Y.-b.; Fan, J.-H.; Yuan, L.-C.; Williams, J. H. (2009), "Pollination biology of basal angiosperms (ANITA grade)", American Journal of Botany, pp. 166–182, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3732/ajb.0800016, PMID 21628182 {{citation}}: Missing or empty |url= (help)
  2. Angiosperm Phylogeny Group (2016). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV". Botanical Journal of the Linnean Society 181 (1): 1–20. doi:10.1111/boj.12385. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடித்தள_பூக்கும்_தாவரம்&oldid=3861496" இலிருந்து மீள்விக்கப்பட்டது