அடிப்படை வாதங்களின் மோதல்
அடிப்படை வாதங்களின் மோதல் (The Clash of Fundamentalisms: Crusades, Jihads and Modernity) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85984-679-7 என்ற நூலை 2002ஆம் ஆண்டு தாரிக் அலி எழுதியுள்ளார். தாரிக் அலி [1] பாகிஸ்தானில் பிறந்த லண்டனில் வசித்த வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்து. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்பும் நிலையில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தான் இவற்றுக்குக் காரணம் என்றால் மிகையல்ல என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இஸ்லாமின் வரலாறு, கலாச்சாரம் அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தாரிக் அலி இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
நூலாசிரியர் | தாரிக் அலி |
---|---|
நாடு | பாகிஸ்தான் |
மொழி | ஆங்கிலம் |
வகை | நாவல் |
வெளியீட்டாளர் | தாரிக் அலி / வெர்சோ பதிப்பகம் 2002 (தமிழில்:கே.ரமேஷ்) |
வெளியிடப்பட்ட நாள் | 2002 |
ஊடக வகை | அச்சு (தடித்த, நூல் அட்டை) |
பக்கங்கள் | 528 பக்கங்கள் |
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சி மற்றும் மேற்கத்திய காலனித்துவத்தின் புதிய வடிவங்கள் ஆகிய இரண்டிற்கும் ஒரு விளக்கத்தை வழங்கும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. [2]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tariq Ali Biography, Contemporary Writers, accessed 31 October 2006
- ↑ goodreads.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help); Text "https://www.goodreads.com/book/show/142009.The_Clash_of_Fundamentalisms" ignored (help)