அடிலு ஏணி என்பது பழங்காலத்தில் தேனெடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஏணி ஆகும். இதனை குரும்பர் இன மக்கள் பயன்படுத்தி உள்ளனர். மூங்கில் கழிகளைக் குறுக்காக இணைத்து பெரும் பாறைகளில் உள்ள தேனை எடுக்க இம்மக்கள் தங்கள் உயிரினை பணயம் வைத்து இந்த ஏணியினைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கத்தில் இல்லாத பழமையான ஏணி குறித்த பாறை ஓவியம் திண்டுக்கல் மாவட்டம், கோழியூத்துப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைக் குகையில் காணப்படுகிறது.[1]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ராஜ குணசேகரன் (2023). "ஆச்சரியப்படுத்தும் ‘அடிலு ஏணி’" (in தமிழ்). தின மலர் (தஞ்சாவூர்) மலர் 72: p. 13. 05 செப்டம்பர் 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிலு_ஏணி&oldid=3793230" இலிருந்து மீள்விக்கப்பட்டது