அடென்சியோயைட்டு
பாசுப்பேட்டு வகை கனிமம்
அடென்சியோயைட்டு (Atencioite) என்பது Ca2Fe2+3Mg2Be4(PO4)6(OH)4•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கால்சியம் இரும்பு பாசுப்பேட்டு வகைக் கனிமமாகும். பிரேசில் நாட்டிலுள்ள மினாசு கெரைசு மாநிலத்தின் திவினோ தாசு லாரன்யெய்ராசு நகராட்சியில் முதன் முதலில் அடென்சியோயைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. ஒளிபுகும் தன்மையும் பசுமை கலந்த பழுப்பு நிறமும் கொண்ட கனிமமாக அடென்சியோயைட்டு கிடைக்கிறது. பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ பல்கலைகழகத்தின் கனிமவியல் பேராசிரியரான அடென்சியோவின் நினைவாக கனிமத்திற்கு அடென்சியோயைட்டு என பெயர் சூட்டப்பட்டது. [1] பன்னாட்டு கனிமவியல் சங்கம் Aco என்ற குறியீட்டால் அடென்சியோயைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.
அடென்சியோயைட்டு Atencioite | |
---|---|
பிரேசில் நாட்டில் கிடைத்த அடென்சியோயைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Ca2Fe2+3Mg2Be4(PO4)6(OH)4·6H2O |
இனங்காணல் | |
நிறம் | பச்சை கலந்த பழுப்பு |
ஒப்படர்த்தி | 2.86 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Atencioite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org