அடேல் பாலசிங்கம்

ஈழப் புரட்சியாளர்

அடேல் ஆன் வில்பி (Adele Ann Wilby, பிறப்பு 30 சனவரி 1950), திருமணமான பிறகு அடேல் பாலசிங்கம், என்பவர் ஆத்திரேலிய வம்சாவளியில் பிறந்த இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவி ஆவார்.[1] இவர் தற்போது இங்கிலாந்தின் இலண்டனில் வசிக்கிறார்.

அடேல் பாலசிங்கம்
பிறப்புஅடேல் ஆன் வில்பி
30 சனவரி 1950
ஆத்திரேலியா, வாரகுல்
தேசியம்ஆத்திரேலியர், ஐக்கிய இராச்சியம்
பணிஅமைதி ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
அன்ரன் பாலசிங்கம்

வாழ்கைக் குறிப்பு தொகு

இவர் ஆத்திரேலியாவின், விக்டோரியாவில் உள்ள வாரகுலில் பிறந்தார். இவர் தொழில்முறை செவிலியர் ஆவார். மெல்போர்னில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள கிப்ஸ்லாந்தில் பணிபுரிந்தார். பின்னர், ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் 1978 இல் இலங்கையில் பிறந்த பிரித்தானிய குடிமகனான அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். அன்ரன் பின்னர் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைமை இராசதந்திரியாகவும் அமைதிப் பேச்சுவார்த்தையாளராகவும் இருந்தார். 2006 திசம்பர் 14 ஆம் நாள் மரணமடைந்தார் [2]

ஈழத் தமிழர் ஆதரவாளர் தொகு

அடேல் பாலசிங்கம் தனது கணவருடன் துவக்கத்தில் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னைக்குச் சென்றார். பின்னர் இலங்கை உள்நாட்டுப் போரின் ஆரம்பக் கட்டங்களில் யாழ்ப்பாணம் உள்ள இலங்கையின் வடக்குப் பகுதிக்கு சென்றார். போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகப் பெண்களின் நலனுக்காகப் பாடுபட்டார்.

சமாதான பேச்சுவார்த்தையாளர் தொகு

பின்னர் 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு பேச்சுவார்த்தை குழுக்களுடன் நடந்த பல சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுங்களின் ஒரு பகுதியாக பங்கேற்றார். "விமன் ஃபைட்டர்ஸ் ஆஃப் லிபரேஷன் டைகர்ஸ்" (1993) மற்றும் அரை சுயசரிதையான "தி வில் டு ஃப்ரீடம்" உள்ளிட்ட பல புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.ISBN 1-903679-03-6 [1][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 A chain of gold ... but no smile on the face of the Australian Tiger
  2. Anton Balasingham, obituary in தி டைம்ஸ்
  3. "Adele; securing a remedy". Archived from the original on 2021-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடேல்_பாலசிங்கம்&oldid=3911249" இலிருந்து மீள்விக்கப்பட்டது