அடோல்ஃப் பிக்
அடோல்ஃப் காசுட்டன் இயூஜின் பிக் (Adolf Gaston Eugen Fick, 22 பெப்ரவரி 1852 – 11 பெப்ரவரி 1937) என்பவர் செருமானியக் கண் மருத்துவர் ஆவார். இவர் தொடு வில்லையைக் கண்டுபிடித்தார். இவர் செருமனிய உடலியங்கியலாலர் அடோல்ஃப் இயூஜின் பிக்கின் மருமகனும், செருமானிய உடற்கூற்றியல் பேராசிரியர் பிரான்சு லுட்விக் பிக்கின் மகனும் ஆவார்.
அடோல்ஃப் காசுட்டன் இயூஜின் பிக் Adolf Gaston Eugen Fick | |
---|---|
பிறப்பு | மார்பூர்க், செருமனி | 22 பெப்ரவரி 1852
இறப்பு | 11 பெப்ரவரி 1937 எர்சிங், செருமனி | (அகவை 84)
அறியப்படுவது | தொடு வில்லையைக் கண்டுபிடித்தவர் |
மருத்துவப் பணிவாழ்வு |
பிக்கிற்கு மூன்று வயதாக இருந்தபோது, அவரது தாயார் இறந்துவிட்டார், ஆறு வயதாக இருந்தபோது, அவரது தந்தை உடற்கூற்றியல் பேராசிரியரான லுட்விக் ஃபிக் இறந்தார். விரைவில், அவர் அடால்ஃப் ஃபிக்கின் குடும்பத்தில் வளர்ந்தார். அடோல்ஃப் இயூஜின் பிக் அவரது மாமா, ஒரு பிரபலமான உடலியங்கியல் நிபுணர், அவரது மருமகனின் கண் மருத்துவப் படிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இளைய ஃபிக் வூர்சுபர்க், சூரிக், மார்பர்க், ப்ரீபர்க் ஆகிய இடங்களில் மருத்துவம் பயின்றார். 1884 ஆம் ஆண்டில், மேரி என்பவரத் திருமணம் செய்ய ஃபிக் ஜெர்மனிக்குச் சென்றார்; இவர்களுக்கு எட்டு குழந்தைகள்.[1]
1888-ஆம் ஆண்டில், தொடு வில்லையின் முதல் வெற்றிகரமான எடுத்துக்காட்டாகக் கருதப்பட வேண்டிய கனமான பழுப்பு நிற கண்ணாடியால் செய்யப்பட்ட குவியமில்லா விழிவெண்படலத்தை உருவாக்கிப் பொருத்தினார். இதனை அவர் முதலில் முயல்கள் மீதும், பின்னர் தனக்கும், கடைசியாக ஒரு சிறிய தன்னார்வலர் குழுவிலும் சோதனை செய்தார். இது தொடு வில்லையின் முதல் வெற்றிகரமான மாடலாகக் கருதப்பட்டது. இவரது யோசனை அடுத்தடுத்த ஆண்டுகளில் பல கண்டுபிடிப்பாளர்களால் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் உலகப் போரின் போது, ஃபிக் பிரான்சு, உருசியா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு தலைமை தாங்கினார். அதே நேரத்தில் அவர் கண் மருத்துவ உடற்கூறியல், ஒளியியல் ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Efron N; Pearson R (October 1988). "Centenary celebration of Fick's Eine Contactbrille". Arch Ophthalmol 106 (10): 1370–1377. doi:10.1001/archopht.1988.01060140534019. பப்மெட்:3052382. http://archopht.jamanetwork.com/article.aspx?articleid=637484.
வெளி இணைப்புகள்
தொகு- Fick biography பரணிடப்பட்டது 5 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம் - The "Kontaktbrille" of Adolf Eugen Fick (1887)
- Fick biography - Contact Lens History, the overseas pioneers