அட்டகங்கி (stomacher) என்பது பெண்களின் ஆடையின் முன்பக்கத்தில் காணப்படும் திறப்பில் பின்னல் செய்து அலங்கரிக்கப் பட்ட ஒரு முக்கோண வடிவப் பகுதியாகும். அட்டகங்கி பெண்களின் இடுப்பில் இறுக்கமாக அணியும் சிற்றாடையின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் அல்லது அதன் ஒரு முக்கோண பகுதியாக இணைத்து வடிவமைக்கப்படும். இது ஒரு அலங்காரப் பொருளாக மட்டும் பயன் படுத்தப்பட்டால் இது ஆடையின் முன்பக்கத்தில் வைத்து தைக்கப்படும் அல்லது ஊசி வைத்து இணைக்கப்படும். சில வேளைகளில் உடுப்பின் இரு பக்கமும் பூத்தையல் இழை அல்லது நாடா கொண்டு இணைக்கப் படும்.

அட்டகங்கி, பிரான்சு, 1700–1750
Open gown over stomacher, 1753

ஆரம்பகால அட்டகங்கி

தொகு

15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில் ஆண் பெண் இரு பாலாரும் இந்த அட்டகங்கியை ஒரு அலங்கார ஆடையாக முன்புறம் திறப்போடு தங்களது மேற்சட்டை அல்லது உடுப்புகள் மீது அணிந்து வந்தனர். இந்த அட்டகங்கி மற்றும் அதோடு இணைந்து அணியப்படும் தலை அலங்கார ஆபரணங்கள் உள்ள ஓவியங்களில் அவற்றின் பாணியும் வடிவமைப்பும் வைத்து ஓவியங்கள் வரையப் பட்ட காலங்கள் கணக்கிடப்படுகிறது.

1603 இல் சவுத்தாம்டன் நகர கோமாட்டி அல்லது சீமாட்டியாகிய எலிசபெத் ரியோத்சுலி என்பார் தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில் "கருஞ் சிவப்பு நிறத்தில், ஒரு முழ அகலத்தில் நான் குதிரையை ஓட்டிச் செல்லும் நாட்களில் என் வயிறை வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளும் நீளத்தில் ஒரு அட்டகங்கி வாங்கி வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.[1]

17 ஆம் நூற்றாண்டில் உள்ள அட்டகங்கி அணிந்துள்ள பெண்களின் படங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. M. Giuseppi, HMC Calendar of the Manuscripts of the Marquis of Salisbury, vol. 15 (London, 1930), p. 204.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டகங்கி&oldid=3579261" இலிருந்து மீள்விக்கப்பட்டது