அட்மோன்டைட்டு
நீரேறிய மக்னீசியம் போரேட்டுக் கனிமம்
அட்மோன்டைட்டு (Admontite) என்பது MgB6O10•7H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நீரேறிய மக்னீசியம் போரேட்டுக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது.
அட்மோன்டைட்டு Admontite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | நெசோபோரேட்டுகள் |
வேதி வாய்பாடு | MgB6O10•7H2O[1]அல்லது MgB6O7(OH)6•4H2O[2] |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | இல்லை |
முறிவு | சங்குருவம் – எளிமையாக நொறுங்கக்கூடிய பொருளிலிருந்து விரிசல்கள் தொடங்குகின்றன. மென்மையாக வளையும் மேற்பரப்புகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. (எ.கா:குவார்ட்சு) |
மோவின் அளவுகோல் வலிமை | 2 - 3 – கிப்சம்-கால்சைட்டு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
அடர்த்தி | 1.82 - 1.87, சராசரி = 1.84 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.442 nγ = 1.504 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.062 |
நிறப்பிரிகை | இல்லை |
மேற்கோள்கள் | [2][1][3] |
தோற்றம்
தொகுகிப்சம், நீரிலி கால்சியம் சல்பேட்டு, அறுநீரிலி கால்சியம் சல்பேட்டு, லோவெயிட், யூக்சிடெரைட்டு, பைரைட்டு குவார்ட்சு படிவுகளுடன் சேர்ந்து கிப்சம் படிவுகளில் அட்மோன்டைட்டு கனிமம் கிடைக்கிறது. கனிமத்தைக் கண்டறிந்த ஆத்திரியா நாட்டைச் சேர்ந்த அட்மான்ட்டு என்பவர் நினைவாகவே இக்கனிமம் அட்மோன்டைட்டு என்று பெயரிடப்பட்டது.
மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2 முதல் 10 வரையிலான அளவில் கடினத்தன்மை மதிப்பை இக்கனிமம் பெற்றுள்ளது.
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் அட்மோண்டைட்டு கனிமத்தை Amt[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 Mindat.org
- ↑ Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.