அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்

(அட்ரினோ கார்டிகோடிராபிக் இயக்குநீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (அட்ரினோ கார்டிகோடிராபிக் இயக்குநீர், Adrenocorticotropic hormone, ACTH) என்று அழைக்கப்படும் இது ஒரு புரத இயக்குநீர் ஆகும். இந்த இயக்குநீரானது எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, அட்ரீனல் சுரப்பியின் மேற்பட்டை (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள்: தோலின் மெலனோசைட்டுகளைத் தூண்டி, தோல் நிறமிகள் தோன்றுவது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் இழையங்களிளிருந்து கொழுப்புகளை இடமாற்றுவது ஆகும்.

அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்
அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் எதிர்ப்பின்னூட்டம்

இந்த இயக்குநீர் அதிகம் சுரக்குமாயின் அது குஷிங்க் நோய்க்கூட்டறிகுறி (cushing syndrome) எனும் நிலையை உருவாக்கும்[1]. மேலும் இந்த இயக்குநீர் நுரையீரலில் ஏற்படும் சிறிய கலப் புற்றுநோயில் வேற்றிட இயக்குநீராகவும் (ectopic hormone) சுரக்கப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kumar, Abbas, Fausto. Robbins and Cotran Pathologic Basis of Disease, 7th ed. Elsevier-Saunders; New York, 2005.