அணித்தரவுக்கோப்பு

அணித்தரவுக்கோப்பு (CSV = Comma-separated values / Character-separated values) என்பது கணியக் கணித்தலில் அதிக அளவு பயன்படும் கோப்பு வகைகளில் ஒன்றாகும். அட்டவணை வடிவில் உள்ள தரவுகளைக் கொண்டு, விரிதாள் போன்ற அட்டவணை வடிவில்லாத, எளிய உரைக்கோப்பினை உருவாக்கும் போது, இந்நுட்பம் பயன்படுகிறது. ஒரே வரிசையில் அமைந்த இரு வேறு கூறுகளை உடையத் தரவுகளானது, அதிக அளவில் காற்புள்ளிகளால் (comma) பிரிக்கப்படுகிறது. எனினும், அலைக்குறி(tilde) போன்ற குறியீடுகளும் இவ்வாறு பிரித்துக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.

அணித்தரவுக்கோப்பு
கோப்பு நீட்சி.csv
அஞ்சல் நீட்சிtext/csv[1]
தோற்றம்அறியப்படவில்லை
Informational RFC Oct 2005[2]
இயல்புபல்லியக்குதளம்,தொடர் தரவு ஓடைகள்
கலவடிவம்தரவுத்தளம் சீர்தரவு பட்டியல்கள்
சீர்தரம்RFC 4180
இதன் குறியீடு

கோப்பு அமைப்பு

தொகு
அணித்தரவுக்கோப்பு உருவாக்கும் எளிய முறை

எடுத்துக்காட்டாக,

  • அட்டவணை வடிவம்
பெயர் வயது கல்வி முகவரி
  • அணித்தரவுக்கோப்பு வடிவங்கள்
  1. 'பெயர்', 'வயது', 'கல்வி', 'முகவரி' (காற்புள்ளி)
  2. பெயர்~வயது~கல்வி~முகவரி (அலைக்குறி)

மேற்கோள்கள்

தொகு
  1. Shafranovich, Y. (October 2005). [[[:வார்ப்புரு:Cite IETF/makelink]] Common Format and MIME Type for CSV Files]. IETF. p. 1. RFC 4180. வார்ப்புரு:Cite IETF/makelink.  IETF = இணைய பொறியியல் பணிக்குழு
  2. (Shafranovich 2005) states, "This RFC documents the format of comma separated values (CSV) files and formally registers the "text/csv" MIME type for CSV in accordance with RFC 2048".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணித்தரவுக்கோப்பு&oldid=3841774" இலிருந்து மீள்விக்கப்பட்டது