அணில்டா தாமசு
அணில்டா தாமசு (Anilda Thomas) ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கணை ஆவார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் 6 இல் பிறந்த [1] அணில்டா தாமசு 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.
தனித் தகவல்கள் | |
---|---|
பிறந்த நாள் | 6 மே 1993 |
பிறந்த இடம் | கொத்தமங்கலம், கேரளா, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | 400 மீட்டர் |
தாமசுடன், நிர்மலா செரோன், எம்.ஆர்.பூவம்மா, டின்ட்டு லூக்கா ஆகியோர் மகளிர் 4 × 400 மீட்டர் பந்தயப் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவதற்காக இந்திய அணி சார்பில் தகுதி பெற்றனர். சூலை 2016 இல் பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை இவர்கள் 3:27.88 நிமிடத்தில் கடந்து இத்தகுதியைப் பெற்றனர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் 16 அணிகளுக்குள் 12 ஆவது சிறந்த அணியாகக் இந்திய அணி கருதப்பட்டது [2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "THOMAS Anilda - Olympic Athletics". Rio 2016. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23. - ↑ Ninan, Susan (13 July 2016). "Indian men's, women's 4x400 relay teams seal Rio spots". ESPN.in. http://www.espn.in/athletics/story/_/id/16952867/indian-mens-women-4x400-relay-teams-seal-rio-spots. பார்த்த நாள்: 10 August 2016.
- ↑ Ninan, Susan (11 July 2016). "4x400 women's relay team a strong medal hope: Usha". ESPN.in. http://www.espn.in/athletics/story/_/id/16973485/usha. பார்த்த நாள்: 10 August 2016.