டின்ட்டு லூக்கா

இந்திய இடைத்தொலைவு ஓட்டப்பந்தய வீரர்

டின்ட்டு லூக்கா (Tintu Luka, பிறப்பு 26 ஏப்ரல் 1989) ஓர் இந்திய இடைதூர விரைவோட்ட விளையாட்டாளர் ஆவார். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி என்ற சிற்றூரில் இருந்து வந்தவர். பி. டி. உஷாவினால் பயிற்றுவிக்கப்படும் இவர் கொயிலாண்டியில் உள்ள உஷா தடகள விளையாட்டுப் பள்ளியில் பயிற்சி பெற்றவர். பெண்களுக்கான 800 மீட்டர் தொலைவு ஓட்டத்தில் தேசிய சாதனையளவிற்கு உரிமையாளராக உள்ளார். 2010 ஆசிய விளையாட்டுக்களில் 800 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

டின்ட்டு லூக்கா
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியா
பிறந்த நாள்21 ஏப்ரல் 1989
பிறந்த இடம்இரிட்டி, கண்ணூர், கேரளா, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஓட்டப்பந்தயம்
நிகழ்வு(கள்)800 மீட்டர் ஓட்டம்
 
பதக்கங்கள்
மகளிர் தட கள விளையாட்டுக்கள்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 குவாங்சோ 800 மீ

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டின்ட்டு_லூக்கா&oldid=3358273" இலிருந்து மீள்விக்கப்பட்டது