அணுக்கட்டு எண்
அணுக்கட்டு எண் (Atomicity) என்பது ஒரு மூலக்கூறில் இருக்கும் மொத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆக்சிசனின் ஒவ்வொரு மூலக்கூறும் (O2) இரண்டு ஆக்சிசன் அணுக்களால் ஆனது. எனவே ஆக்சிசனின் அணுக்கட்டு எண் 2 ஆகும்[1]. முற்காலத்தில் அணுக்கட்டு எண் என்ற சொல் சில நேரங்களில் இணைதிறனைக் குறிக்கும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அணுக்கட்டு எண்ணின் அடிப்படையில் மூலக்கூறூகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
ஓரணு மூலக்கூறுகள்
தொகுஓரணுவால் ஆக்கப்பட்ட மூலக்கூறுகள் ஓரணு மூலக்கூறுகள் எனப்படும்.
ஈரணு மூலக்கூறுகள்
தொகுஇரண்டு அணுக்கள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகள் ஈரணு மூலக்கூறுகள் எனப்படும்.
மூவணு மூலக்கூறு
தொகுமூன்று அணுக்கள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகள் மூவணு மூலக்கூறுகள் எனப்படும்.
எ.கா: ஓசோன்.
பல்லணு மூலக்கூறுகள்
தொகுமூன்று அணுக்களுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆன மூலக்கூறு பல்லணு மூலக்கூறு எனப்படும்.
அனைத்து உலோகங்களும், கார்பன் போன்ற வேறு சில தனிமங்களும் எளிமையான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவை மிகப் பெரிய மற்றும் வரம்பற்ற எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டுள்ளன. அவற்றின் அணுக்கட்டு எண்ணை தீர்மானிக்க முடியாது. எனவே பொதுவாக இவற்றின் அணுக்கட்டு எண் 1 ஆக கருதப்படுகிறது.
ஒரே தனிமத்தின் புறவேற்றுமை வடிவங்கள் வெவ்வேறு அணுக்கட்டு எண்ணையும் கொண்டிருக்கலாம். முதல் முப்பது தனிமங்களின் அணுக்கட்டு எண் அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது.
!அணு எண் | தனிமம் | அணுக்கட்டு எண் |
---|---|---|
1 | நீரியம் | 2 |
2 | ஈலியம் | 1 |
3 | இலித்தியம் | 1 |
4 | பெரிலியம் | 1 |
5 | போரான் | 1* |
6 | கரிமம் | 1 |
7 | நைட்ரசன் | 2 |
8 | ஆக்சிசன் | 2 |
9 | புளோரின் | 2 |
10 | நியான் | 1 |
11 | சோடியம் | 1 |
12 | மக்னீசியம் | 1 |
13 | அலுமினியம் | 1 |
14 | சிலிக்கான் | 1** |
15 | பாசுபரசு | 4 |
16 | கந்தகம் | 8 |
17 | குளோரின் | 2 |
18 | ஆர்கான் | 1 |
19 | பொட்டாசியம் | 1 |
20 | கல்சியம் | 1 |
21 | இசுக்காண்டியம் | 1 |
22 | தைட்டானியம் | 1 |
23 | வனேடியம் | 1 |
24 | குரோமியம் | 1 |
25 | மாங்கனீசு | 1 |
26 | இரும்பு | 1 |
27 | கோபால்ட்டு | 1 |
28 | நிக்கல் | 1 |
29 | செப்பு | 1 |
30 | துத்தநாகம் | 1 |
* போரானுக்கு பல புறவேற்றுமைகள் உண்டு. | ||
** சிலிக்கான் வலைப்பின்னல் அணிக்கோவையாக உருவாகிறது |
மேற்கோள்கள்
தொகு- ↑ Determination of Chlorine in Oxygen From Solid Chemical Oxygen Generators, SAE International, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4271/arp1320