அண்ணாதுரை (திரைப்படம்)

ஜி. சீனிவாசன் இயக்கத்தில் 2017இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

அண்ணாதுரை ஜி. சீனிவாசன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி முன்னணிப்பாத்திரத்தில் நடித்து தமிழில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசை இயக்குராகவும் முதன் முதலாக படத்தொகுப்பாளராகவும் விஜய் ஆண்டனி பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தினை ஃபாத்திமா விஜய் ஆண்டனியும் ராதிகா சரத்குமாரும் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் தயாரிப்புப்பணிகள் பிப்பிரவரி 2017இல் தொடங்கப்பட்டது.[1]

அண்ணாதுரை
இயக்கம்ஜி. சீனிவாசன்
தயாரிப்புஃபாத்திமா விஜய் ஆண்டனி
ராதிகா சரத்குமார்
கதைஜி. சீனிவாசன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜய் ஆண்டனி
தினா சம்பிகா
மகிமா
ஜூவல் மேரி
ஒளிப்பதிவுதில்ராஜ்
படத்தொகுப்புவிஜய் ஆண்டனி
கலையகம்ஆர் ஸ்டுடியோஸ்
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடு30 நவம்பர் 2017
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு10 கோடி
மொத்த வருவாய்35 கோடி

நடிப்பு தொகு

 • விஜய் ஆண்டனி - அண்ணாதுரையாகவும் தம்பிதுரையாகவும் இரட்டைவேடம்
 • தினா சம்பிகா- ரேவதியாக
 • மகிமா- ஈஸ்வரியாக
 • ஜூவல் மேரி-சித்ராவாக
 • ராதாரவி
 • காளி வெங்கட்- கர்ணாவாக
 • நளினிகாந்த்
 • ரிண்டு ரவி
 • உதய் ராஜ்குமார்
 • சேரான்ராஜ்- தயாளனாக
 • டேவிட்

தயாரிப்பு தொகு

பிப்ரவரி 2017இல் விஜய் ஆண்டனி அண்ணாதுரை என்னும் தலைப்பிலானத் திரைப்படத்தினை ராதிகா சரத்குமாருடன் இணைந்து புதுமுக இயக்குநர் ஜி. சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.[2] இப்படத்தின் தலைப்பிற்கும் அரசியல்வாதி அண்ணாதுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மக்களிடையே பேர்பெற்ற ஒரு பெயர் தனது திரைப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளதாகவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்[3] இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி - அண்ணாதுரையாகவும் தம்பிதுரையாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதோடு, படத்திற்கு இசையமைத்து, படத்தொகுப்பையும் அவர் செய்துள்ளதாக இப்படத்தின் இயக்குநர் ஜி. சீனிவாசன் கூறியுள்ளார்[4]

கதை தொகு

காதலி இறந்ததால் மதுப்பழகத்திற்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கைத்தடமும், அவனைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வும் எப்படியெல்லாம் தடம்மாறுகிறது என்பதே அண்ணாதுரை திரைப்படத்தின் மூலக்கதையாகும்.[5] தெரியாமல் செய்தபிழையால் சீரழியும் தம்பியின் வாழ்க்கையை மாற்ற அண்ணன் செய்யும் ஈகத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகின்றது.[6]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு