அண்ணாநகர் இரட்டை வளைவுகள்
அண்ணா நகர் இரட்டை வளைவுகள் (Anna Nagar twin arches) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னை அண்ணா நகரில் அலங்காரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இரட்டை வளைவுகள் அமைப்பாகும். 1986ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று தமிழ்நாடு முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பவள விழா நினைவாக இவை கட்டப்பட்டன.[1] பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணாநகர் மூன்றாவது பகுதி சந்திப்பில் அமைந்துள்ள இவ்வளைவுகள் நகரின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும். தெற்குப் பகுதியிலிருந்து அண்ணாநகரின் புறநகருக்குள் வருவதற்கான நுழைவாயிலாகவும் இவை திகழ்கின்றன.
வரலாறு
தொகுஅண்ணா நகர் இரட்டை வளைவுகள் 1985ஆம் ஆண்டு[2] சென்னை மாநகராட்சியால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சிஎன் அண்ணாதுரையின் பவள விழாவை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டன. 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இவை[3] 105 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டன [4] 1 சனவரி 1986 அன்று முன்னாள் முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டன. [1] வளைவுகளை சிற்பி கணபதி இசுதபதி வடிவமைத்தார். இவர் வளைவுகளின் திறப்பு விழாவின் போது கௌரவிக்கப்பட்டார்.[4]
கட்டமைப்பு
தொகுவளைவுகள் 57 அடி உயரம் கொண்டவையாகும். [4]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Anna Arch renovation work to kick-off from Wednesday". The New Indian Express (Chennai: Express Publications). 25 September 2012. https://www.newindianexpress.com/cities/chennai/2012/sep/25/anna-arch-renovation-work-to-kick-off-from-wednesday-409354.html.
- ↑ Ramkumar, Pratiksha (6 May 2012). "Anna Arch to be demolished". The Times of India (Chennai: The Times Group). https://timesofindia.indiatimes.com/city/chennai/Anna-Arch-to-be-demolished/articleshow/13016015.cms.
- ↑ "Anna Arch refuses to give in". The Hindu (Chennai: Kasturi & Sons). 3 September 2012. https://www.thehindu.com/news/cities/chennai/anna-arch-refuses-to-give-in/article3851578.ece.
- ↑ 4.0 4.1 4.2 Ramakrishnan, Deepa H. (6 September 2012). "How the Anna arches stood their ground". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/news/cities/chennai/how-the-anna-arches-stood-their-ground/article3863277.ece.