அதங்கோட்டாசான்

(அதங்கோட்டாசிரியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அதங்கோட்டாசான் ஒரு பழம் பெரும் தமிழ்ப் புலவர். இவர் வாழ்ந்த ஊர் அதங்கோடு. இது தற்கால கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பஃறுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுரத் தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட "அகத்தியர்" தலைமைதாங்கி நடத்தி வந்தார்.அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.

இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைப்பர். 'கபாடபுரத்தில் ',"அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்."அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் தொல்காப்பியர். இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பனம்பாரனாரின் கருத்து

தொகு

தொல்காப்பியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பனம்பாரனார் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்

இதன் விளக்கம் யாதெனில் மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.

இளம்பூரணரின் கருத்து

தொகு

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணர் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார்.

அதங்கோட்டாசான் தமிழ் மன்றம்

தொகு

தமிழறிஞர் அதங்கோட்டாசானை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் மன்றம் அவர் பெயரில் சீரிய முறையில் இயங்கி வருகிறது. இவருக்கு முழு உருவ பளிங்குக் கல் சிலை 1984 ஆம் ஆண்டு அதங்கோட்டில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம். ஜி இராமசந்திரனால் அமைக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு முதல் அங்கு முழுநேர நூலகம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் தலைவர் புலவர் கொ.கோவிந்தநாதன் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அதன்கோட்டை சார்ந்தவர் என நிறுவ பல காலமாக முயன்று வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதங்கோட்டாசான்&oldid=3616662" இலிருந்து மீள்விக்கப்பட்டது