அதங்கோடு
அதங்கோடு (Athencode) குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் விளவங்கோடு வட்டத்தில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.[3] தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறந்தது இவ்வூர் ஆகும். இவ்வூரின் வடக்கே கருப்பட்டியாலுமூட்டி, தெற்கே முளமூட்டுக்கடவு, கிழக்கே மடிச்சல், மேற்கே மணக்காலை ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. இவ்வூரை ஒட்டி தாமிரபரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு, அதங்கோட்டில் அஞ்சாலி கடவு முதல் ளமூட்டுக்கடவு , செங்கிலாகம் கடவு , நொத்தோலி கயம் (மண்ணடிக்கடவு), ஆலஞ்சாலி கடவு மற்றும் குந்திரிமூட்டுக்கயம் வரை வடக்கு தெற்காக பாய்கிறது. இங்குள்ள ஆனந்தநகரில் பழமை வாய்ந்த மாயா கிருசுணசாமி கோயில் அமைந்துள்ளது.
அதங்கோடு | |||
ஆள்கூறு | 8°18′N 77°10′E / 8.30°N 77.17°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "அதங்கோட்டின் அமைவிடம்".