கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி

மருத்துவமனைக் கட்டடங்களுள் ஒன்று

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி (Kanyakumari Government Medical College) தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று ஆகும். இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள [1] இக்கல்லுரி தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் என்ற இடத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி
குறிக்கோள்குணமாக்கு, அரவணை, ஆறுதலளி (“Cure, Care, Console)
நிறுவப்பட்டது2001
வகைஅரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
துறை முதல்வர்மரு.R.பாலாஜி நாதன்
ஆசிரியர்கள்200 (approx.)
பணியாளர்கள்600 (approx.)
பட்டப்படிப்புவருடத்திற்கு 100 பேர்
அமைவுஆசாரிப்பள்ளம்,கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
வளாகம்100 ஏக்கர்
விளையாட்டு விளிப்பெயர்KGMC
இணைப்புகள்தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

வரலாறுதொகு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்திருந்த அரசு காசநோய் மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவதற்கு உரிய தளமாக தேர்வு செய்யப்பட்டது. மருத்துவ கல்லூரியும் மருத்துவமனையும் ஒரே வளாகத்தில் இருக்கவேண்டும் என்ற இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவுறுத்தலுக்கு உட்பட்டு இக்கல்லூரியானது நிறுவப்பட்டது. 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. முதல் வருட மருத்துவப் படிப்பு இங்கு 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 500 மருத்துவ மாணவர்களும் பல மருத்துவ உதவியாளர் பயிற்சி மாணவர்களும் எந்த நேரத்திலும் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கற்பிக்கப்படும் பாடங்கள்தொகு

வருடத்திற்கு மருத்துவப் பட்டப்படிப்பில் நூறு இளங்கலை மாணவர் சேர்க்கைகளுக்கான இடங்களைக் கொண்ட இக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பல்வேறு பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இணைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்தொகு

இந்த மருத்துவக் கல்லூரியுடன் கீழ்கண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  • இராஜாக்கமங்கலம் துறை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
  • செண்பகராமன் புதூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
  • வட்டவிளை நகர்ப்புற சுகாதார நிலையம்
  • கோதநல்லூர் மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

மேற்கோள்கள்தொகு

  1. "KanyaKumari Government Medical College, Asaripallam". பார்த்த நாள் 17 June 2017.