அதிதி அவசுதி
அதிதி அவசுதி (Aditi Avasthi) ஓர் இந்திய தொழில்முனைவோர் ஆவார், அவர் பெங்களூரை மையமாகக் கொண்ட எம்பிப் என்ற கல்வி நுட்பவியல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். தி எகனாமிக் டைம்ஸ் பிரைம் இவரை "ஆண்டின் அக்சென்ச்சர் வாஹினி கண்டுபிடிப்பாளர்" என்று அறிவித்தது [1] மற்றும் அதற்காக எகனாமிக் டைம்ஸ் பிரதம பெண் தலைமை விருதுகள் 2019 (ETPWLA'19) இல் வழங்கப்பட்டது. கல்வி காங்கிரசு 2019 இல் இவரை "ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோராக" தேர்வு செய்தது, மேலும் 2018 ஆம் ஆண்டில் வோக் மூலம் 'ஆண்டின் சிறந்த பெண்மணி' தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பிபிசியின் முதல் 100 பெண்களில் 2017 ஆம் ஆண்டிலும் அவர் இடம் பெற்றார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅதிதி அவசுதி டிசம்பர் 10, 1981 இல் இந்தியாவின் பஞ்சாபின் லூதியானாவில் பிறந்தார். அவர் அருண்குமார் மற்றும் வீணா அவஸ்தி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். அவர் இந்தியாவில் பல பள்ளிகளில் படித்தார்.
அவசுதி 2003 இல் தாப்பர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் 2010 இல் சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
தொகுஇந்தியாவில் தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து, டாட்டா கன்சல்டன்சி சேவையகத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அதிதி, இங்கிலாந்தில் புதிய வணிக முயற்சிகளின் வளர்ச்சியில் பங்களித்தார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸில், அவர் ஏஐஎம்ஐ இளம் தலைவர் திட்டத்தை வென்றார், இருப்பினும் அவருக்கான விருது மிகம் இளம் வயதாக இருந்த காரணத்தினால் இந்தப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.[4]
முதுகலை வணிகத்திற்குப் பிறகு, அவர் பார்க்லேஸில் ஆப்பிரிக்காவில் அவர்களின் மொபைல் வங்கிப் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் மூலோபாயத் தலைவராக சேர்ந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெலாவேர் நகருக்குச் சென்ற அவர், பார்க்லே கார்டில் மொபைல் வணிக வணிகத்தில் கூட்டாண்மைக்குரிய மேம்பாட்டு இயக்குநராக ஒரு வருடம் பணியாற்றினார்.
2012 ஆம் ஆண்டில், அவர் குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து 700,000 டாலர் நிதியுதவியுடன் எம்பைபினை நிறுவினார், மேலும் அடுத்த ஆண்டில் கலாரி கேபிடல் மற்றும் லைட்பாக்ஸ் வென்ச்சர்ஸிலிருந்து மேலும் முதலீடுகளைப் பெற்றார்.[5] இது அனைத்து தர பாடத்திட்டம் மற்றும் கற்றல் சூழலை ஒன்றாக இணைக்கும் அறிவு வரைபடத்தின் அடிப்படையில், கல்விக்கான தனிப்பயனாக்கப்பட்ட அமைப்பாகும். எனவே மாணவர்கள் தங்கள் இலக்குகளை, கற்றல் முடிவுகளை அடைய முடியும்.இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேவைகளையும் வழங்குகிறது.[6]
அவசுதி தனது வணிகத்தைப் பற்றி, "எனது சொந்த தொழிலை நடத்துவது என்பது எனது நோக்கத்திற்கு உயிர் வழங்குவது போன்றதாகும், மற்றும் தரவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி முறையை சீர்படுத்தி எனது இலக்குகளை அடைய உறுதியளிக்கின்றன. பொறுமை, விடாமுயற்சி மற்றும் பல பணிகளைச் செய்வது எனக்கும் பெரும்பாலான பெண்களுக்கும் இயல்பாகவே வருகிறது, எனவே புதிதாகத் தொடங்கும் போது அது ஒரு பெரிய நன்மையாக அமைகிறது. " [7]
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுபார்ச்சூனின் 40 வயதிற்குட்பட்ட 40பேரின், 2015 ஆம் ஆண்டு பட்ட்டியலில் இடம் பெற்றார்.[8] ஆண்டின் சிறந்த வணிக தாக்கத்தினை ஏற்படுத்திய பெண் தொழில்முனைவோர், விருது [9] வோக் , இளம் சாதனையாளர் என்ற பிரிவின் கீழ் ஆண்டின் சிறந்த பெண் தொழில் முனைவோர் [10]
சான்றுகள்
தொகு- ↑ Mar 2019, ET Online | 30; Ist, 03:03 Am, ETPWLA 2019: Embibe founder Aditi Avasthi gets 'Accenture Vaahini Innovator of the Year', பார்க்கப்பட்ட நாள் 2020-01-20
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Vogue Women Of The Year 2018 Winners - Kareena Kapoor, Alia Bhatt". Vogue India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
- ↑ "Mithali Raj named in BBC's 100 most influential women list of 2017". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-09-27. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
- ↑ Dasgupta, Brinda (5 January 2016). "First Year at Work: Reach out and grab opportunities says, Aditi Avasthi, CEO & Founder of Embibe". The Economic Times. https://economictimes.indiatimes.com/jobs/first-year-at-work-reach-out-and-grab-opportunities-says-aditi-avasthi-ceo-founder-of-embibe/articleshow/50448410.cms. பார்த்த நாள்: 22 November 2017.
- ↑ Srivastava, Samar (5 October 2015). "Embibe: A teacher's pet tool". Forbes India. http://www.forbesindia.com/article/checkin/embibe-a-teachers-pet-tool/41195/1. பார்த்த நாள்: 22 November 2017.
- ↑ Jain, Samiksha (4 March 2016). "They Came, They Saw, They Conquered: 4 Women Who Chose unconventional Fields & Excelled". Enrepreneur India. https://www.entrepreneur.com/article/271940. பார்த்த நாள்: 22 November 2017.
- ↑ "Gender bias or not there's no stopping for Indian's female startup brigade". The Economic Times. 22 November 2015. https://economictimes.indiatimes.com/small-biz/startups/gender-bias-or-not-theres-no-stopping-for-indias-female-startup-brigade/articleshow/49879125.cms. பார்த்த நாள்: 22 November 2017.
- ↑ "Aditi Avasthi - India's Young & Brightest Entrepreneurs in 40 Under 40 2015 - Fortune India". www.fortuneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.
- ↑ Kh, Tara; elwal (2016-11-19). "Meet The Digital Women Awards 'Disruptor' Winners". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.
- ↑ "Aditi Avasthi's Embibe combines AI and education in a revolutionary way". VOGUE India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-10. Archived from the original on 2019-02-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.