அதிபரவளைவுரு அமைப்பு
அதிபரவளைவு அமைப்பு (Hyperboloid structure) என்பது, அதிபரவளைவு வடிவத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கட்டிடக்கலை அமைப்பு ஆகும். இவ்வடிவத்துக்கு இயல்பாக இருக்கக்கூடிய அமைப்பியல் வலுவைப் பயன்படுத்துவதற்காகப் பெரும்பாலும் உயரமான கோபுரங்கள் இவ்வடிவில் வடிவமைக்கப்படுகின்றன. அமைப்பியல் பயனுக்காக மட்டுமன்றி அழகுக்காகவும் கட்டிடங்களை இவ்வடிவில் அமைப்பது உண்டு. அதிபரவளைவு அமைப்பொன்றை முதன் முதலாக உருசியப் பொறியியலாளரான விளாடிமிர் சுக்கோவ் (1853 - 1939) என்பவர் கட்டினார்.[1] உலகின் முதல் அதிபரவளைவுக் கோபுரம் உருசியாவின் லிப்பெட்சுக் ஒப்லாஸ்த்தில் உள்ள பொலிபினோவில் உள்ளது.
அதிபரவளைவு அமைப்புக்களின் இயல்பு
தொகுஅதிபரவளைவு அமைப்புக்கள் எதிர்மறைக் காசிய வளைமை (Gaussian curvature) கொண்டவை. அதாவது இவை நேராகவோ அல்லது வெளிப்புறம் வளைந்தோ இல்லாமல் உட்புறமாக வளைந்து இருப்பன. இரட்டை வரிப் பரப்புக்களாக (doubly ruled surfaces) இருப்பதால் நேரான வளைகளால் அமைந்த பின்னல்களாக இவற்றை உருவாக்க முடியும். இதனால் இவற்றைக் கட்டுவது இலகுவானது என்பதுடன், வளைந்த வளைகளால் அமைக்கப்படவேண்டிய வளைந்த மேற்பரப்பு அமைப்புக்களைவிட இவை உறுதியானவையாகவும் உள்ளன.[2] தட்டையான மேற்பரப்புக்களைக் கொண்ட நேரான அமைப்புக்களைவிட அதிபரவளைவு அமைப்புக்கள் கூடிய உறுதி கொண்டவை. எனினும் இத்தகைய அமைப்பில் கட்டிடங்களைக் கட்டும்போது அவற்றில் பெருமளவு இடம் வீணாவதால், நீர்த்தாங்கிகள் போன்ற தேவைகளுக்கான அமைப்புக்களும், அழகியல் தேவைகளுக்காக அமைக்கப்படும் கட்டிடங்களுமே பெரும்பாலும் இவ்வாறு கட்டப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hyperboloid water tower". International Database and Gallery of Structures. Nicolas Janberg, ICS. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-11-28.
- ↑ Cowan, Henry J. (1991), Handbook of architectural technology, Van Nostrand Reinhold, p. 175, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780442205256,
It is easier to build timber formwork for a concrete structure or to fabricate a steel structure if a surface is singly ruled, and even more so if it is doubly ruled.
வெளி இணைப்புக்கள்
தொகு- The research of the Shukhov's World's First Hyperboloid structure, Prof. Dr. Armin Grün
- International campaign to save the Shukhov Tower
- Anticlastic hyperboloid shells பரணிடப்பட்டது 2006-04-28 at the வந்தவழி இயந்திரம்
- Shells: Hyperbolic paraboloids (hypar)
- Hyperbolic Paraboloids & Concrete Shells பரணிடப்பட்டது 2005-08-27 at the வந்தவழி இயந்திரம்
- Lattice shell structures
- Special Structures பரணிடப்பட்டது 2007-03-07 at the வந்தவழி இயந்திரம்
- Rainer Graefe பரணிடப்பட்டது 2007-11-22 at the வந்தவழி இயந்திரம்: “Vladimir G. Šuchov 1853–1939 – Die Kunst der sparsamen Konstruktion.”, [1]