அதிராம்பட்டினம் அபயவரதேசுவரர் கோயில்
அதிராம்பட்டினம் அபயவரதேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் பட்டுகோட்டைக்குத்தென் கிழக்கில் 14 கிமீ தொலைவிலும், முத்துப்பேட்டைக்குத் தெற்கில் 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அதிவீரராமன்பட்டினம் என்று இவ்வூர் முன்னர் அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.[1]
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் அபயவதேசுவரர் ஆவார். கேட்ட வரத்தைத் தருபவராக கருதப்படுவதால் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். அழகுத் தெய்வமாகக் காணப்படுகின்ற நிலையில் இங்குள்ள இறைவி சுந்தரநாயகி ஆவார். கீழ்க்கண்ட பாடல் இத்தலத்தின் பெருமையைக் கூறுகிறது.[1]
“ | ஆதிரை லிங்கமாய் ஆமரை சோதியான் ஆதிரை தானத்தில் அபயமென்றாளுபவன் |
” |
சிறப்பு
தொகுஇக்கோயில் பைரவ முனிவர் வழிபடும் சிறப்பைப் பெற்றுள்ளது. திருவாதிரையில் பிறந்த அதிவீரராம பாண்டியன் என்னும் மன்னன் இங்கு வழிபட்டு இவ்வூருக்கு இப்பெயர் அமையக் காரணமாக இருந்தார். மன்னன் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் இவ்வூர் திருவாதிரையான்பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் திருவாதிரை சிறப்பான விழாக்களாக இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]
அமைப்பு
தொகுமூன்று நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல மரம் வன்னி மரம் ஆகும்.