அதி சமீர்
அதி சமீர் (Adi Shamir, எபிரேயம்: עדי שמיר; பிறப்பு சூலை 6, 1952) ஓர் இசுரேலிய கமுக்கவியல் ஆய்வாளரும் அறிவியலாளரும் ஆவார். இவர் ஆ.எசு.ஏ (RSA) என்று பரவலாக அறியப்படும் கமுக்க முறையைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவர். இவருடன் சேர்ந்து கண்டுபடித்த மற்ற இருவர், உரொனால்டு இரிவெத்து, இலியோனார்டு ஆடல்மன் ஆகியோர். இவர் பைகெ-பியட்டு-சமீர் அடையாளங்காண் முறை (Feige–Fiat–Shamir identification scheme) என்பதனைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரும் ஆவார். இவை தவிர, இவர் பகுப்பிய கமுக்கவியல் என்பதனையும், இத்துறையில் இன்னும் பல கண்டுபிடிப்புகளையும் செய்தவர்.
அதி சமீர் | |
---|---|
பிறப்பு | சூலை 6, 1952 தெல் அவீவ், இசுரேல் |
வாழிடம் | இசுரேல் |
துறை | மறையீட்டியல் |
பணியிடங்கள் | வைசுமன் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தெல் அவீவ் பல்கலைக்கழகம் வைசுமன் அறிவியல் கழகம் |
ஆய்வு நெறியாளர் | சோஃகர் மன்னா |
முனைவர் பட்ட மாணவர்கள் | மீரா பாலபன் எலீ பிஃகம் உரியேல் பைகெ அமோசு பியாத்து அலெக்சாந்தர் கிலிமோவ் துரோர் இலபிடாட்டு அவித்தால் சிரிஃப்ட்டு சிவ் சோஃபர்மன் எரன் துரோமெர் |
அறியப்படுவது | ஆர்.எசு.ஏ பைகெ-பியத்து-சமீர் அடையளங்காண் முறை பகுப்பிய கமுக்கவாய்வு |
விருதுகள் | எர்டாய்சு பரிசு (1983) பாரிசு கனலாக்கிசு பரிசு (1996) தூரிங்கு பரிசு (2002) இசுரேல் பரிசு |
கல்வி
தொகுஅதி சமீர் இசுரேலில் தெல் அவீவ் நகரில் பிறந்தார். தெல் அவீவ் பல்கலைக்கழகத்தில் 1973 ஆம் ஆண்டு கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், வைசுமன் கழகத்தில் 1975 இல் முதுகலைப் பட்டமும் 1977 இல் முனைவர் பட்டமும் கணியறிவியல் துறையில் பெற்றார். அவருடைய முனைவர் பட்ட ஆய்வுரையின் தலைப்பு "Fixed Points of Recursive Programs and their Relation in Differential Agard Calculus". அதன் பின்னர் வார்விக்குப் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பயிற்சி பெற்றபின்னர் எம்.ஐ.டி என்னும் மாசாச்சுசெட்சு தொழினுட்பக் கழகத்தில் 1977-1980 வரை ஆய்வு செய்தார். அதன் பின்பு வைசுமன் அறிவியல் கழகத்தில் பேராசிரியராக வந்து சேர்ந்தார். 2006 முதல் பாரீசில் உள்ள ஈக்கோலே நோர்மால சுப்பீரியர் என்னும் நிறுவனத்தில் அழைப்புப் பேராசிரியராக இருந்தார்.
பரிசுகளும் பெருமைகளும்
தொகு- 2017 சப்பான் பரிசு [1]
- 2002 கணிப்பொறியிய குமுகம் (ACM) தரும் தூரிங்கு விருது உரொனால்டு இரிவெசுட்டு என்பாருடனும் இலியோனார்டு ஆட்லமன் என்பாருடனும் இவர்கள் கண்டுபிடித்த ஆர்.எசு.ஏ முறை என்னும் கமுக்கவியல் முறைக்காக வழங்கப்பட்டது.[2]
- பாரிசு கானல்லக்கிசு கருத்திய செய்முறைப் பரிசு[3]
- எர்டாய்சுப் பரிசு, இசுரேல் கணிதக் குமுகம்.
- 1986 ஐ.இ.இ.இ டபிள்யூ ஆர். சி. பேக்கர் விருது[4]
- யூ.ஏ.பி அறிவியற் பரிசு (UAP Scientific Prize)
- வாத்திகனின் பையசு 11 தங்கப் பதக்கம்
- 2000 ஐ.இ.இ.இ கோச்சி கோபயாசி கணினிகள் மற்றும் தொடர்பாடலியல் பரிசு[5]
- 2008 இல் கணினியறிவியலுக்காக இசுரேல் பரிசு[6][7]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Laureates of the Japan Prize".
- ↑ "A. M. Turing Award". கணிமைப் பொறிகளுக்கான சங்கம். Archived from the original on 2013-07-09. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 5, 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-06. பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.
- ↑ "IEEE W.R.G. Baker Prize Paper Award Recipients" (PDF). ஐஇஇஇ. Archived from the original (PDF) on 2011-04-25. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 5, 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "IEEE Koji Kobayashi Computers and Communications Award Recipients" (PDF). ஐஇஇஇ. Archived from the original (PDF) on 2010-11-24. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 15, 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Israel Prize Official Site (in Hebrew) - Recipient's C.V."
- ↑ "Israel Prize Official Site (in Hebrew) - Judges' Rationale for Grant to Recipient".
வெளியிணைப்புகள்
தொகு- Adi Shamir at DBLP Bibliography Server