அதீத நூற்றாண்டாளர்
அதீத நூற்றாண்டாளர் (Supercentenarian) என்பது தனது 110ஆவது பிறந்த நாளின் பின்பும் வாழ்ந்து வரும் ஒருவரைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வாறு அதீத நூற்றாண்டாளராக ஆயிரத்தில் ஒருவரே வாழமுடியும்.[1] இதுவரையிலும் அதிகூடிய வயதில் வாழ்ந்த மனிதரின் வயது 125 ஆகும். அந்தவகையில் மனிதர்களின் அதிகூடிய வாழ்நாள் வயதாக 125 கொள்ளப்படுகின்றது.[2] ஐக்கிய அமெரிக்கா[3] யப்பான், இங்கிலாந்து, வேல்ஸ், பிரான்சு, இத்தாலி[4] ஆகிய நாடுகளிலேயே இவ்வாறான மக்கள் அதிகம் வாழ்கின்றனர், வாழ்ந்துள்ளனர். மேலும், உலகின் முதலாவது அதீத நூற்றாண்டாளராக கீர்ட் அதிரான்ஸ் பூம்கார்ட் (Geert Adriaans Boomgaard) என்பவர் என்பவர் கருதப்படுகின்றார். இவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Maier, H., Gampe, J., Jeune, B., Robine, J.-M., Vaupel, J. W. (Eds.) (2010). Supercentenarians. Germany: Max Planck Institute for Demographic Research. p. 325. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-11519-6.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ B. M. Weon; J. H. Je (2009). "Theoretical estimation of maximum human lifespan". Biogerontology 10: 65–71. doi:10.1007/s10522-008-9156-4.
- ↑ Rosenwaike, Ira; Stone, Leslie F. (2003). "Verification of the Ages of Supercentenarians in the United States: Results of a Matching Study". Demography 40 (4): 727–739. doi:10.1353/dem.2003.0038. https://archive.org/details/sim_demography_2003-11_40_4/page/727.
- ↑ Maier, H.; Gampe, J.; Jeune, B.; Robine, J.-M.; Vaupel, J. W., eds. (2010). Supercentenarians. Springer. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-11520-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-11519-6. பார்க்கப்பட்ட நாள் 2017-04-13.