அத்திரி மலை

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி - சிவசைலம் அருகே உள்ள கடனா அணை ஒட்டிய வனப்பகுதியே அத்ரி மலை (Athiri Hills) எனப்படும்.

கங்கைக்கு நிகரான தீர்த்தம்

அமைவிடம் தொகு

 
கடனா ஆறு

திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் ஒட்டிய மேற்குத் தாெடர்ச்சி மலைப்பகுதியில் ஓடும் கடனா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணையே கடனா அணை ஆகும். கடனா நதி ஓடும் மலைப்பகுதிேய அத்ரி மலை எனப்படும். இது புலிகள் வாழும் வனப்பகுதியாகும். இயற்கை மாறாது இருக்கும் மலைப்பகுதி ஆகும்.[1] வனத்துறை அனுமதியுடன் இப்பகுதிக்கு சென்று மாலை 3மணிக்குள் திரும்ப வேண்டும்.

தலப்புராணம் தொகு

அத்திரி ஓர் மகரிஷி ஆவார். அத்திரி மனைவியின் பெயர் அனுசுயாதேவி. அனுசுயாதேவியிடம் ஒரு முறை பிரம்மா,விஸ்ணு,சிவன் மூவரும் மாறுவேடம் தரித்து உணவு யாசகம் செய்ய சென்றனர்.அனுசுயாதேவி மும்மூர்த்திகளுக்கும் உணவு தர வீட்டின் உள்ளே அழைத்தார். மும்மூர்த்திகளும் கூறிய நிபந்தனையை ஏற்று மும்மூர்த்திகளையும் பாலகர்களாக மாற்றி உணவு ஊட்டினார். முப்பருெம்தேவிகளும் தங்கள் கணவன்மார்கள் குழந்தைகளாக உள்ள நிலை அறிந்து அனுசுயாதேவியிடம் முறையிடவே நீர் தெளித்து உண்மை உருவம் பெறச் செய்தார். எனவே அனுசுயாதேவி கற்புக்கரசியாக விளங்கினார்.

சிறப்பு தொகு

 
மலையேற்ற பக்தர்கள்

இந்து சமய அறநிலைத் துறையின் மேற்பார்வையில் அருள்மிகு அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில் மற்றும் கோரக்கர் திருக்காேவில் அத்ரி மலையில் அமைந்துள்ளது.கங்கைக்கு நிகரான அத்ரி கங்கை தீர்த்தம் வற்றாத நிலையில் உள்ளது.இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளது. இதனை காண்பது அரிது. வைகாசி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாள்களில் மரங்களில் இருந்து பன்னீர் தெளிப்பது போல் இச்சன்னதி அருகில் விழும். இம்மலையில் ஓடும் கடனா நதி காேடையிலும் வற்றாது ஓடும் தன்மை காெண்டது.

மேற்காேள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திரி_மலை&oldid=3231242" இலிருந்து மீள்விக்கப்பட்டது