அந்தமான் நிக்கோபார் தீவு மருத்துவ அறிவியல் நிறுவனம்
அந்தமான் நிக்கோபார் தீவு மருத்துவ அறிவியல் நிறுவனம், போர்ட் பிளேர் (Andaman and Nicobar Islands Institute of Medical Sciences) என்பது இந்தியாவின் போர்ட் பிளேரில் உள்ள ஒரு மருத்துவப் பள்ளியாகும்.[1] அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஒன்றிய அரசின் நிறுவனமாகும். இது அந்தமான் & நிக்கோபார் நிர்வாகத்தின் கீழ் அந்தமான் & நிக்கோபார் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட கல்லூரி ஆகும். 'தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய (58 கல்லூரிகள்) மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான' மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருத்துவப் பள்ளி நிறுவப்பட்டது. கல்லூரி ஒரு வருடத்திற்கும் குறைவான கால நேரத்தில் அமைக்கப்பட்டது.[2]
குறிக்கோளுரை | பணிவுடன் அறிவு அழகு (विद्या विनयेन शोभते) |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2015 |
Academic affiliation | புதுவைப் பல்கலைக்கழகம், தேசிய மருத்துவ ஆணையம் |
பணிப்பாளர் | மருத்துவர் பிராக்யா சர்மா |
கல்வி பணியாளர் | 144 |
பட்ட மாணவர்கள் | 100 (இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்) per year |
அமைவிடம் | அட்லாண்டா முனை, போர்ட் பிளேர் 11°40′23″N 92°44′46″E / 11.673°N 92.746°E |
இணையதளம் | http://andssw1.and.nic.in/ANIIMS/ |
அமைவிடம்
தொகுஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் தெற்கு அந்தமான் மாவட்டம், அட்லாண்டா முனையில், தேசிய நினைவு சிறை வளாகம் அருகே தற்காலிகமாகச் செயல்பட்டது. புதிய வளாகம் கார்பின்ஸ் கோவ், தெற்கு முனையில் உள்ளது.[3]
மருத்துவமனை
தொகுஜி. பி. பாந் மருத்துவமனை அந்தமான் நிக்கோபார் தீவு மக்களுக்கான மருத்துவமனையாகச் செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட அனைத்து பொதுவான சிறப்பு மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. புதிய புறநோயாளிகள் பிரிவு, வரவேற்பு / மையப் பதிவு, நோய் கண்டறியும் ஆய்வகங்கள், இரத்த வங்கி மற்றும் கலையரங்கம் / விரிவுரை மண்டபம் ஆகியவை உள்ளன.
துறைகள்
தொகு- மயக்கவியல்
- உடற்கூறியல்
- உயிர்வேதியியல்
- சமூக மருத்துவம்
- பல் மருத்துவம்
- தோல் மருத்துவம்
- காது மூக்கு தொண்டை
- தடயவியல் மருத்துவம்
- மருந்து
- நுண்ணுயிரியல்
- மகப்பேறியல் & பெண்ணோயியல்
- கண் மருத்துவம்
- எலும்பியல்
- குழந்தை மருத்துவம்
- நோயியல்
- மருந்தியல்
- உடலியல்
- மனநல மருத்துவம்
- கதிரியக்கவியல்
- அறுவை சிகிச்சை
- காசநோய் & மார்பு
சேர்க்கை
தொகுகல்லூரியில் ஆண்டுதோறும் இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவை சிகிச்சை பட்ட படிப்பில் 100 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகின்றன. இவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[4][5][6] 75 இடங்கள் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மாணவர்களுக்கும், 10 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ANIIMS Andaman Nicobar Islands Institute of Medical Sciences". andssw1.and.nic.in (in ஆங்கிலம்). 13 August 2017.
- ↑ "A tough dream to achieve". andamanchronicle.net. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
- ↑ "Chief Secy visits ANIIMS, directs early construction of medical college campus". The Phoenix Post. 10 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
- ↑ "Prospectus for M.B.B.S. course 2017" (PDF). aniims.org. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
- ↑ "Completed Trainings FY 2016-17". Clinical Development Services Agency. Archived from the original on 13 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
- ↑ "Prompt handling of a life threatening emergency saves life" (PDF). www.andaman.gov.in. Archived from the original (PDF) on 13 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)