அந்தமான் வாத்து
அந்தமான் வாத்து | |
---|---|
படம் கிலெமானட்சு (1908) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அனாடிடே
|
துணைக்குடும்பம்: | அனடினே
|
பேரினம்: | அனாசு
|
இனம்: | அ. அல்போகுலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
அனாசு அல்போகுலாரிசு (ஹியூம், 1873) | |
வேறு பெயர்கள் [2] | |
மரேகா அல்போகுலாரிசு ஹியூம், 1873 |
அந்தமான் வாத்து (அனாசு அல்போகுலாரிசு) என்பது வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தில் காணப்படும் ஒரு வாத்து சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் முன்பு சுந்தா வாத்தின் துணையினமாகக் கருதப்பட்டது.
வகைப்பாட்டியல்
தொகுஅந்தமான் வாத்து குறித்து முதல் முறையான விளக்கம் 1873ஆம் ஆண்டில் இங்கிலாந்து பறவையியலாளர் ஆலன் ஆக்டவியன் ஹியூம் என்பவரால் மாரேகா அல்போகுலாரிசு என்ற இருசொற் பெயரில் பதிவுச்செய்யப்பட்டது.[3] இது இப்போது அனாசு பேரினத்தில் உள்ள பல வாத்துச் சிற்றினங்களுடன் வைக்கப்பட்டுள்ளது.[4] இது முன்பு இந்தோனேசியாவில் காணப்படும் சுந்தா வாத்து (அனாசு கிபரிப்ரான்சு) சிற்றினத்தின் துணையினமாக கருதப்பட்டது.[4]
விளக்கம்
தொகுஇந்த சிற்றினம் அடர் பழுப்பு நிறத்தில் பஃபி அடையாளங்களுடன் உள்ளது. கண் மற்றும் தொண்டை வெளிர் நிறத்தில் இருக்கும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையம் காணப்படும். இதன் அலகு நீல சாம்பல் நிறத்திலும் கருவிழி சிவப்பு நிறத்திலும் உள்ளது.
பரவலும் வாழிடமும்
தொகுஅந்தமான் தீவுகள் (இந்தியா) மற்றும் கோக்கோ தீவு (மியான்மர்) ஆகியவற்றில் அந்தமான் வாத்து காணப்படுகிறது. இவை உள்நாட்டுக் குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் மற்றும் கடற்காயல்களில் காணப்படுகின்றன.[5][6] 1995-98-இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 500 முதல் 600 வாத்துக்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் 674 வாத்துக்கள் உள்ளது 2005-இல் கணக்கிடப்பட்டது.[7] கடந்த சில தசாப்தங்களாக இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டில் 1,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான வாத்துகள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டது.[1]
நடத்தை
தொகுஇவை இரவில் நெல் வயல்களில் இரைத்தேடுகின்றன. இதன் இனப்பெருக்க காலம் சூலை முதல் அக்டோபர் வரையும் நாணல் திட்டுகளில் கூடுகள் கட்டும் பழக்கத்தினையும் கொண்டுள்ளன. கூடு புற்களை கொண்டு கட்டப்படுகிறது. இதில் சுமார் ஒன்பது முட்டைகள் வரை இடுகின்றன.[8] இவை முன்பு மரப் பொந்துகளில் இனப்பெருக்கம் செய்வதாகக் கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் எந்த ஆதாரமும் இது தொடர்பாகக் கிடைக்கவில்லை. இவை முக்கியமாக மெல்லுடலிகள் மற்றும் கணுக்காலிகளை உணவாகக் கொள்கின்றன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Anas albogularis". IUCN Red List of Threatened Species 2017: e.T22727280A110106998. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22727280A110106998.en. https://www.iucnredlist.org/species/22727280/110106998. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Richmond Index card
- ↑ Allan Octavian Hume (1873). "Novelties: Mareca albogularis, Sp. Nov.". Stray Feathers 1 (2, 3, 4): 303–304. https://www.biodiversitylibrary.org/page/30007209.
- ↑ 4.0 4.1 Gill, Frank; Donsker, David, eds. (2017). "Screamers, ducks, geese & swans". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.
- ↑ Inglis, C. M. (1904). "The Oceanic, or Andaman Teal Nettium alligulare". J. Bombay Nat. Hist. Soc. 15 (3): 525. https://www.biodiversitylibrary.org/page/2097157.
- ↑ Wilson, N. F. (1904). "The Oceanic, or Andaman Teal Nettium albigulare". J. Bombay Nat. Hist. Soc. 15 (3): 525–526. https://www.biodiversitylibrary.org/page/2097157.
- ↑ 7.0 7.1 Vijayan, L (2006). "Ecology and conservation of the Andaman Teal". J. Bombay Nat. Hist. Soc. 103 (2): 231–238.
- ↑ Kulkarni, S.; Chandi, M. (2003). "Note on breeding of Andaman Teal Anas gibberifrons in south Andaman Islands, India". Journal of the Bombay Natural History Society 100 (1): 112–113. https://www.biodiversitylibrary.org/page/48602686#page/122/mode/1up.