அந்தோனி கோடி
அந்தோனி கோடி ஐ கார்னெட் (Antoni Gaudí i Cornet; காட்டலான் உச்சரிப்பு:[ənˈtɔni ɣəwˈði]; 1852, சூன் 25 - 1926, சூன் 10); ஒரு கட்டிடக் கலைஞரான இவர், காட்டலான் நவீனத்துவம் (Catalan Modernism) நன்கு அறிந்த சிறந்த பயிற்சியாளர் ஆவார். கோடியின் படைப்புகள் ஒருவகை பாங்குடையது, மற்றும் மிகவும் தனித்துவமானது. இவரது தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம் உட்பட பெரும்பாலான படைப்புகள் காட்டலோனியா பகுதியின் தலைநகரான பார்சிலோனாவில் அமைந்துள்ளன.[3]
அந்தோனி கோடி Antoni Gaudí | |
---|---|
![]() 1878 இல், பாவ் ஆடுவார்ட் எனும் நிழற்படக் கலைஞரால் பதிவுசெய்த கோடியின் படிமம். | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | எசுப்பானியம் |
பிறப்பு | சூன் 25, 1852 ரெயுசு, காத்தலோனியா, ![]() |
இறப்பு | 10 சூன் 1926 பார்செலோனா, காத்தலோனியா, ![]() | (அகவை 73)
பணி | |
கட்டிடங்கள் | திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம், காசா மில்லா, காசா பட்லோ |
திட்டங்கள் | குவெல் பூங்கா, கோலோனியா தேவாலயம், குவெல் |
கோடியின் பணியானது அவரது வாழ்க்கையில் உணர்வு மிகுந்த தாக்கத்தை கொண்டிருந்தது: கட்டிடக்கலை, இயல்பு, மற்றும் சமயம் போன்ற பண்புகள் அதில் காணப்பட்டது.[4] அவர் உருவாக்கும் ஒவ்வொரு படைப்புகளும் அதனதன் விவரங்களை உள்ளடக்கியதாகுவும், மற்றும் அவரது கட்டிடக்கலையில், கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய சுட்டாங்கல் வண்ணம் தீட்டிய கண்ணாடிகள், தேனிரும்பு வடிப்புகளுடன், தச்சு வேலைகளும் இணைந்திருந்தன.
சான்றுகள்தொகு
- ↑ Massó 1974, ப. 17–18.
- ↑ "Biography at Gaudí and Barcelona Club, page 1". 16 October 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 November 2005 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Biography of Antoni Gaudi". www.casabatllo.es (ஆங்கிலம்). 2018. 2018-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Antoni Gaudi - ARCHITECTS Related Projects: 3". 2018-03-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-04 அன்று பார்க்கப்பட்டது.