அனசுயா சென்குப்தா (நடிகை)

இந்திய நடிகை

அனசுயா சென்குப்தா (Anasuya Sengupta) ஓர் இந்திய நடிகையும் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளரும் ஆவார். இவர் 1 செப்டம்பர் 1986 அன்று கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்.[1] இவர் திரைத்துறையில் நடிகையாக இருக்கிறார். மேலும் 2024 கான் திரைப்பட விழாவில் அன் செர்டெய்ன் ரிகார்ட் விருது பிரிவில் செயல்திறன் விருதுகளை வென்றார்.[2]

அனசுயா சென்குப்தா
பிறப்பு1 செப்டம்பர் 1986
கொல்கத்தா, இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை
விருதுகள்அன் செர்டெய்ன் ரிகார்ட் விருது

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு வங்காளக் குடும்பத்தில் அனசுயா சென்குப்தா பிறந்தார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால் பின்னர் தன்னை ஒரு பத்திரிகையாளராக நிலைநிறுத்த விரும்பினார்.[3]

நடிப்பு வாழ்க்கை

தொகு

இயக்குநர் அஞ்சன் தத் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான மேட்லி பங்காலி என்ற திரைப்படத்தில் அனசுயா ஒரு துணை வேடத்தில் நடித்தார். இவர் 2013 இல் மும்பைக்கு மாறுவதற்கு முன்பு சிறிது காலம் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். மும்பையில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.[4]

பாராட்டுக்கள்

தொகு

அனசுயா சென்குப்தா, 2024 கான் திரைப்பட விழாவின் அன் செர்டெய்ன் ரிகார்ட் (Un Certain Regard ) விருது பிரிவில் செயல்திறன் விருதுகளை வென்றார். தி ஷேம்லெஸ் (2024) திரைப்படத்தில் நடித்ததற்காக அனசுயா இவ்விருதை வென்றார்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Anasuya Sengupta Age, Date Of Birth, Movies, Award and Other". Vindhya Bhaskar. Vindhya Bhaskar. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
  2. "Un Certain Regard Winners List 2024". Festival de Cannes. 24 May 2024. பார்க்கப்பட்ட நாள் 25 May 2024.
  3. "Who is Anasuya Sengupta? The first Indian actor to win Best Actress at Cannes once felt ‘claustrophobic, lost’ in Mumbai’s film industry". The Indian Express (New Delhi). 25 May 2024. https://indianexpress.com/article/entertainment/bollywood/who-is-anasuya-sengupta-once-felt-claustrophobic-lost-in-bollywood-first-indian-actor-best-actress-at-cannes-film-festival-9350909/. 
  4. 4.0 4.1 "Anasuya Sengupta creates history, becomes first Indian actress to win Best Actress at Cannes Film Festival" (in en). The Indian Express (New Delhi). 25 May 2024. https://indianexpress.com/article/entertainment/bollywood/anasuya-sengupta-wins-best-actress-at-cannes-film-festival-un-certain-regard-the-shameless-first-indian-actor-9350857/. 
  5. "Un Certain Regard Winners List 2024". Festival de Cannes. 24 May 2024. பார்க்கப்பட்ட நாள் 25 May 2024.
  6. "Cannes 2024: Anasuya Sengupta wins Un Certain Regard best actress trophy, creates history" (in en-IN). The Hindu. 25 May 2024. https://www.thehindu.com/entertainment/movies/cannes-2024-anasuya-sengupta-wins-un-certain-regard-best-actress-trophy-creates-history/article68214300.ece.