அனந்த ராமுலு மல்லு

இந்திய அரசியல்வாதி

அனந்த ராமுலு மல்லு (Anantha Ramulu Mallu) (1942-1990) மக்களவையில் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[2]

சிறீ
அனந்த ராமுலு மல்லு
நாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்
பதவியில்
18 ஜனவரி 1980 – 31 டிசம்பர்r 1984
முன்னையவர்எம். பீமசேனா தேவ்
பின்னவர்வி. துளசிராம்
நாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்
பதவியில்
2 டிசம்பர் 1989 – 7 பிப்ரவரி 1990
முன்னையவர்வி.துளசிராம்
பின்னவர்மல்லு ரவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1942
இலட்சுமிபுரம் சிறீகாகுளம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1990
குடியுரிமை இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
உறவினர்கள்மல்லு பாட்டி விக்ரமார்கா (சகோதரர்)[1]
மல்லு ரவி (சகோதரர்)

ஆரம்ப வாழ்க்கை தொகு

மல்லு கம்மம் மாவட்டம், வைரா மண்டலத்தில் உள்ள இலட்சுமிபுரம் கிராமத்தில் தந்தை அகிலாண்ட தாசு மற்றும் தாய் மாணிக்கம்மா ஆகியோருக்குக் மூத்த மகனாகப் பிறந்தார். மல்லு ரவி மற்றும் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் இவரது சகோதரர்கள். இவர் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டதாரி ஆவார். 1962ல் கிராம வளர்ச்சி அலுவலராக இருந்தார்.

1978 இல் தனது பணியை விட்டுவிலகி இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1980 ஆம் ஆண்டு மகபூப்நகர் மாவட்டம் நாகர்கர்னூல் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆர்வத்தாலும் முன்னேற்றத்தாலும் ஈர்க்கப்பட்ட இந்திரா காந்தி இவரை நாடாளுமன்றக் குழுவில் பிரதிநிதியாக இரண்டு முறை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். 1986 ஆம் ஆண்டில், இவர் இராஜீவ் காந்தியால் இந்திய மாநில நிதிக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் இணைச் செயலாளராக பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 1989 இல் கட்சியின் பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டார்.

இறப்பு தொகு

மல்லு,1990 பிப்ரவரி 7 அன்று மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "YSR's trusted lieutenant named Chief Whip". தி இந்து. 5 June 2009 இம் மூலத்தில் இருந்து 8 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090608140046/http://www.hindu.com/2009/06/05/stories/2009060559150500.htm. பார்த்த நாள்: 31 January 2013. 
  2. "Combined List of Members". Parliament of India. Archived from the original on 27 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த_ராமுலு_மல்லு&oldid=3820247" இலிருந்து மீள்விக்கப்பட்டது