அனாதைப் பெண் (திரைப்படம்)
(அனாதைப் பெண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனாதைப் பெண் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். மங்களாம்பாள் அனாதைச் சிறுமியாக நடித்திருந்தார். மற்றும் எம். கே. ராதா, பி. யு. சின்னப்பா இன்னும் பலரும் நடித்திருந்தனர்.[1][2] இப்படமானது வை. மு. கோதைநாயகியின் அனாதைப் பெண் என்ற புதினத்தின் தழுவலாகும்.
அனாதைப் பெண் | |
---|---|
இயக்கம் | ஆர். பிரகாஷ் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் மொய்தீன் |
கதை | கதை வை. மு. கோதைநாயகி வசனம்: சோமயாஜுலு |
திரைக்கதை | ஆர். பிரகாஷ் |
நடிப்பு | எம். ஆர். மங்களாம்பாள் எம். கே. ராதா பி. யு. சின்னப்பா கொத்தமங்கலம் சுப்பு எல். நாராயண ராவ் டி. ஏ. சுந்தராம்பாள் டி. எஸ். கிருஷ்ணவேணி பி. ஆர். மங்களம் |
ஒளிப்பதிவு | கமால் கோஷ் |
படத்தொகுப்பு | தர்ம்வீர் |
வெளியீடு | நவம்பர் 26, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 18500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்தொகு
பாட்டியைத் தவிர யாருமற்ற அனாதையான இந்திராணியும், வளைதடிப் பந்தாட்ட வீரரான துரை ராஜாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் அதன் விடியலுமே கதை.[3]
மேற்கோள்கள்தொகு
- ↑ (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails1.asp.
- ↑ Guy, Randor (29 அக்டோபர் 2009). "Anadhai Penn (1938)". தி இந்து. 15 ஏப்ரல் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 திசம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ அறந்தை நாராயணன் (செப்டம்பர் 29 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். ஜகன்மோகினி கோதைநாயகி". தினமணிக் கதிர்: 14-15.